பைத்தான் - செயற்கூறினுள் அளபுருக்களை அனுப்புதல் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions
செயற்கூறினுள் அளபுருக்களை அனுப்புதல்
அளபுருக்கள் அல்லது செயலுருப்புகளை செயற்கூறினுக்கு அனுப்பலாம்.
def function_name (parameter(s) separated by comma):
அளபுருக்களின் பயன்பாட்டினை செயற்கூறு வரையறையில் பார்க்கலாம்.
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்படும் அளபுருக்கள் அந்த செயற்கூறினுள்ளேயே பயன்படுத்தப்படும்.
அனைத்து விதமான தரவுகளையும் செயற்கூறினுள் அனுப்ப முடியும். அளபுருக்களை செயற்கூறினுக்கு
அனுப்பும் செயற்கூறு வரையறை எடுத்துக்காட்டு நிரலில் கொடுக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
# assume w = 3 and h = 5
def area(w,h):
return w * h
print (area (3,5))
மேலே உள்ள குறிமுறையில் அகலம் மற்றும் உயரத்தின் மதிப்புகள் முறையே W மற்றும் h அளபுருக்களில் இருத்தப்படுகிறது. "area” என்ற செயற்கூறினை உருவாக்குவதற்கு இந்த அளபுருக்கள் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட செயற்கூறினை அழைக்கும் போது வெளியீடாக அகலம் மற்றும் உயரத்தின் பெருக்கல் மதிப்பினை திருப்பி அனுப்புகிறது. W மற்றும் h அளபுருக்களுக்கு முறையே 3 மற்றும் 5 மதிப்புகளை அனுப்பினால் வெளியீடாக 15 என்ற மதிப்பதை திருப்பி அனுப்பும்.
நாம்
அடிக்கடி அளபுருக்கள் மற்றும் செயலுருபுக்கள் என்ற வார்த்தையை மாற்றி மாற்றி உபயோகப்படுத்துகிறோம்.
எனினும், இரண்டிற்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. அளபுருக்கள் என்பவை செயற்கூறு
வரையறையில் பயன்படுத்தப்படும் மாறிகள். ஆனால் செயலுருப்புகள் என்பது செயற்கூறின் அளபுருக்களுக்கு
அனுப்பப்படும் மதிப்புகள் ஆகும்.