பைத்தான் - return கூற்று | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions

   Posted On :  22.08.2022 07:42 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்

return கூற்று

return கூற்று செயற்கூறினை முடித்து வைத்து அழைப்புக் கூற்றுக்கு மதிப்பை திருப்பி அனுப்பும். பொதுவாக செயற்கூறின் நோக்கம் உள்ளீடைப் பெற்று ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்புவதாகும்.

return கூற்று

• return கூற்று செயற்கூறினை முடித்து வைத்து அழைப்புக் கூற்றுக்கு மதிப்பை திருப்பி அனுப்பும். பொதுவாக செயற்கூறின் நோக்கம் உள்ளீடைப் பெற்று ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்புவதாகும்.

• ஒரு செயற்கூறு மதிப்பை அழைப்புக்கூற்றுக்கு திருப்பி அனுப்ப தயாராக இருக்கும் போது return கூற்று பயன்படுத்தப்படுகிறது. எனவே, இயக்க நேரத்தில் பல return கூற்றுகள் இருந்தாலும் ஒரே ஒரு return கூற்று மட்டுமே இயக்கப்படும். .

• செயற்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட return கூற்றுகள் இருந்தாலும் ஒரே ஒரு return கூற்று மட்டுமே இயக்க நேரத்தில் இயக்கப்படும்.


1. return கூற்றின் பொது வடிவம்

return /கோவைகளின் பட்டியல்]

இந்த கூற்றில் உள்ள கோவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பைத் திருப்பி அனுப்புகிறது. செயற்கூறினுள் உள்ள கூற்றில் கோவைகள் இல்லாமலோ அல்லது return கூற்று இல்லாமலோ இருந்தால் செயற்கூறு "None” பொருளைத் தருபிப் அனுப்பும்.

எடுத்துக்காட்டு:

 # return statment

def usr_abs (n):

if n>=0:

return n

else:

return -n

# Now invoking the function

x=int (input(“Enter a number :”).

print (usr_abs (x))

வெளியீடு 1:

Enter a number : 25

25

வெளியீடு 2:

Enter a number : -25

25

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions : The return Statement Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள் : return கூற்று - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்