பைத்தான் - நூலகத்தை பயன்படுத்தும் செயற்கூறுகள் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions
உள்ளிணைந்த நூலகத்தை பயன்படுத்தும் செயற்கூறுகள்
1. உள்ளிணைந்த மற்றும் கணித செயற்கூறுகள்
கணித செயற்கூறுகள்
குறிப்பு
அனைத்து
கணித செயற்கூறுகளுக்கும் தேவையான முக்கியமான math கூறுகள்
செயற்கூறுகளின் தொகுப்பு என்றால் என்ன?
செயற்கூறுகளின் தொகுப்பு என்றால் என்ன? செயற்கூறு திருப்பி அனுப்பும்
மற்றொரு செயற்கூறிற்கு செயலுருபாக, பின்னலான அமைப்பில் பயன்படுத்தினால் அதற்கு தொகுப்பு
(composition) என்று பெயர். எடுத்துக்காட்டாக, பயனரிடமிருந்து எண் மதிப்பை அல்லது கோவையை
உள்ளீடாகப் பெற விரும்பினால், input() செயற்கூறு மூலம் பயனரிடமிருந்து சரத்தை உள்ளீடாகப்
பெற்று eval() செயற்கூறு மூலம் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டு:
# இந்த நிரல் தொகுப்பை விளக்குகிறது
>>>n1 = eval (input ("Enter a number: "))
Enter
a number: 234
>>>n1
234
>>> n2 = eval (input ("Enter an arithmetic
expression: "))
Enter an arithmetic expression: 12.0+13.0*2
>>> n2
38.0