Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | செயற்கூறு செயலுருபுகள்

பைத்தான் - செயற்கூறு செயலுருபுகள் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions

   Posted On :  18.12.2022 07:10 am

12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்

செயற்கூறு செயலுருபுகள்

செயலுருபுகள் செயற்கூறினை அழைக்க பயன்படுகிறது. செயலுருபுகள் நான்கு வகைப்படும் தேவைப்படும் செயலுருபுகள் (Required arguments), சிறப்பு சொல் செயலுருபுகள் (Keyword arguments), தானமைவு செயலுருபுகள் (Default arguments), மாறும் நீள செயலுருபுகள் (variable length arguments)

செயற்கூறு செயலுருபுகள் (Function Arguments)

செயலுருபுகள் செயற்கூறினை அழைக்க பயன்படுகிறது. செயலுருபுகள் நான்கு வகைப்படும் தேவைப்படும் செயலுருபுகள் (Required arguments), சிறப்பு சொல் செயலுருபுகள் (Keyword arguments), தானமைவு செயலுருபுகள் (Default arguments), மாறும் நீள செயலுருபுகள் (variable length arguments).

1. தேவைப்படும் செயலுருபுகள்

செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும் செயலுருபுக்கள் எனப்படும். இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும். தொடரியல் பிழையை தவிர்த்து, தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.

எடுத்துக்காட்டு

def printstring(str):

print ("Example - Required arguments")

print (str)

return

# Now you can call printstring() function

printstring()

மேலே உள்ள குறிமுறை இயக்கப்படும் போது இது பின்வரும் பிழையை கொடுக்கிறது.

Traceback (most recent call last):

File "Req-arg.py", line 10, in <module>

printstring()

TypeError: printstring() missing 1 required positional argument: 'str'

மேலே உள்ள குறிமுறையில் print string()க்கு பதிலாக printstrin("Welcome”) பயன்படுத்தினால் இதன் வெளியீடு,

வெளியீடு

Example - Required arguments

Welcome]

2. சிறப்புச் சொல் செயலுருபுகள்

அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது. சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.

எடுத்துக்காட்டு:

def printdata (name):

print (“Example-1 Keyword arguments”)

print (“Name :',name)

return

# Now you can call printdata() function

printdata(name = "Gshan”)

மேற்கண்ட குறிமுறை இயக்கப்படும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

வெளியீடு

Example-1 Keyword arguments

Name :Gshan

எடுத்துக்காட்டு:

def printdata (name):

print (“Example-2 Keyword arguments”)

print (“Name :' “, name)

return

# Now you can call printdata() function

printdata (namel = “Gshan”)

மேற்கண்ட குறிமுறை இயக்கப்படும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

வெளியீடு

TypeError: printdata() got an unexpected keyword argument 'name1'

எடுத்துக்காட்டு:

def printdata (name, age):

print ("Example-3 Keyword arguments")

print ("Name :'',name) print ("Age :";age)

return

# Now you can call printdata() function

printdata (age=25, name="Gshan")

மேற்கண்ட குறிமுறை இயக்கப்படும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

வெளியீடு

Example-3 Keyword arguments

Name: Gshan

Age : 25

குறிப்பு 

மேலே உள்ள நிரலில் அளபுருக்களின் வரிசைமுறை மாறி உள்ளது.

3. தானமைவு செயலுருபுகள்

பைத்தானில், செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும். இதுவே தானமைவு செயலுருபு ஆகும்.

பின்வரும் எடுத்துக்காட்டில் செயலுருபுவை அனுப்பாதபோது தான்மைவு Salary-யை அச்சிடுவதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு:

def printinfo( name, salary = 3500):

print (“Name:“, name)

print (“Salary: “, salary)

return

printinfo ("Mani")

மேற்கண்ட குறிமுறை இயக்கப்படும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

வெளியீடு

Name: Mani

Salary: 3500

மேற்கண்ட குறிமுறையை printinfo("Ram”, 2000)என மாற்றும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

வெளியீடு

Name: Ram

Salary: 2000

மேலே உள்ள குறிமுறையில் 2000 என்ற மதிப்பை salary என்ற செயலுருபுக்கு அனப்பினால் ஏற்கனவே உள்ள தானமைவு மதிப்பு நிராகரிக்கப்படும்.

4. மாறும் நீள செயலுருபுகள்

சில சமயங்களில், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலுருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும். மீண்டும் செயற்கூறினை மறுவரையறை செய்வது கடினமான செயல் அதற்கு பதிலாக மாறும் நீள செயலுருபுகளை பயன்படுத்தலாம். செயற்கூறு வரையறையில் இது குறிப்பிடப்படுவதில்லை . மாறாக இந்த செயலுருபுகளை குறிப்பிடுவதற்கு * குறியீடு பயன்படுகிறது. மூன்றுக்கு அதிகமான செயலுருபுகளை sum( ) செயற்கூறுவிற்கு அனுப்பும் பொழுது என்ன நிகழும் என பார்ப்போம்.

எடுத்துக்காட்டு:

def sum(x,y,z):

print("sum of three nos :'',x+y+z)

sum(5,10,15,20,25)

மேலே உள்ள குறிமுறையை இயக்கும் போது பின்வரும் வெளியீடு கிடைக்கும்.

TypeError: sum() takes 3 positional arguments but 5 were given

மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்

def function_name(*args):

function_body

return_statement

எடுத்துக்காட்டு:     

def printnos (*nos):

for n in nos:

print(n)

return

# now invoking the printnos() function

print ('Printing two values')

printnos (1,2)

print ('Printing three values')

printnos (10,20,30)

வெளியீடு

Printing two values

1

2

Printing three values

10

20

30

 

மதிப்பீடு செய்க

மேலே உள்ள நிரலில், printnos என்ற செயற்கூறின் பெயரை printnames என்ற அனைத்து இடங்களிலும் மாற்றி ஏற்ற தரவுகளை கொடுக்கவும். எடுத்துக்காட்டு , printnos(10,20,30) என்பதை printnames('mala', 'kala', bala') என மாற்றி கொடுத்து வெளியீட்டைக் காண். மாறி நீள செயலுருபுகளில், செயலுருபுகளை இரண்டு வழிகளில் அனுப்பலாம்.

In Variable Length arguments we can pass the arguments using two methods.

1. சிறப்புச் சொற்களற்ற மாறி செயலுருபுகள்

2. சிறப்புச் சொல் மாறி செயலுருபுகள்

சிறப்புச் சொற்களற்ற மாறி செயலுருபுகளை tuples என்று அழைக்கிறோம். இதைப்பற்றி விரிவாக பின்வரும் பாடங்களில் காணலாம்.

குறிப்பு 

சிறப்புச் சொல் மாறி செயலுருபு இந்த புத்தகத்திற்கு அப்பாற்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா?

பைத்தானில் print() செயற்கூறு என்பது மாறும் நீள செயலுருபுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions : Function Arguments Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள் : செயற்கூறு செயலுருபுகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்