பைத்தான் - செயற்கூறுவை வரையறுத்தல் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions
செயற்கூறுவை வரையறுத்தல்
ஒரு செயல்பாட்டை உருவாக்கி அதை பயன்படுத்துவதற்கு செயற்கூறினை வரையறுக்க வேண்டும். பைத்தான் மொழியில் பல உள்ளிணைந்த செயற்கூறுகள் உள்ளன. (எடுத்துக்காட்டாக, print() செயற்கூறு), இருப்பினும் பயனர் அவருக்குத் தேவையான செயற்கூறினையும் வரையறுக்க முடியும். செயற்கூறினை வரையறுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை.
def <function_name ([parameter1, parameter2...] )>:
<Block of Statements>
return <expression / None>
தொகுதி:
தொகுதி என்பது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளையுடைய
குறிமுறையைக் குழுவாக ஒன்றிணைத்து, அதனை நிறைவேற்றும் போது ஒரு பெரிய வரிசையின் கூற்றுகளாக
எடுத்துக் கொள்கிறது. பைத்தானில், தொகுதியில் உள்ள கூற்றுகளை உள்தள்ளல் மூலம் எழுதப்படுகிறது.
பொதுவாக, ஒரு வரி உள்தள்ளப் படும்போது (4 இடைவெளி) தொகுதியானது தொடங்கும். தொகுதியின்
உள்ளே உள்ள அனைத்து கூற்றுகளையும், ஒரே மாதிரியாக உள் தள்ள வேண்டும்.
• செயற்கூறு தொகுதி def என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறுவின்
பெயர் மற்றும் () அடைப்புக்குறியுடன் முடிய வேண்டும்.
• ஏதேனும் உள்ளீட்டு செயலுருப்புகள் அல்லது அளபுருக்கள் இருப்பின்
அவற்றை செயற்கூற்றை வரையறுக்கும் போதே ( ) என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்க வேண்டும்.
• குறிமுறை தொகுதியானது எப்பொழுதும் முக்காற்புள்ளிக்கு பிறகு
உள் தள்ளி வர வேண்டும்.
• "return [கோவை]" கூற்று செயற்கூறுவை முடித்து வைக்கும்.
விருப்பப்பட்டால் கோவையின் மதிப்பை, அழைக்கும் கூற்றுக்கு திருப்பி அனுப்பும். செயலுருபுகள்
இல்லாத return, return None-க்கு நிகரானது.
குறிப்பு
பைத்தான்
சிறப்புச் சொற்கள் செயற்கூறுவின் பெயர்களாக பயன்படுத்தக் கூடாது.
குறிப்பு
மேலே
உள்ள பொது வடிவத்தில் சதுர அடைப்புக் குறிக்குள் [] உள்ளவை அனைத்தும் விருப்பத் தேர்வாகும்
பின்னலான தொகுதி
ஒரு தொகுதி மற்றொரு தொகுதியைக் கொண்டிருந்தால் அது பின்னலான
தொகுதியாகும். முதல் தொகுதியின் கூற்றுகளை ஒற்றை தத்தல் இடைவெளி அளவிற்கு உள்தள்ளினால்,
இரண்டாவது தொகுதியின் கூற்றுகளை இரண்டு தத்தல் இடைவெளி அளவிற்கு : உள்தள்ள வேண்டும்.
செயற்கூற்றை வரையறைக்கும் எடுத்துக்காட்டு,
def Do_Something():
value =1 #Assignment கூற்று
return value #Return கூற்று
இப்பொழுது செயற்கூறின் செயல்பாட்டை சோதிப்பின் மூலம் அது நிரலில்
எவ்வாறு வேலை செய்கிறது என்பதை காணலாம். பின்வரும் எடுத்துக்காட்டில் ஒரு சாதாரண செயற்கூறு
சரத்தை வெளியிடுவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு
def hello():
print (“hello - Python”)
return
1. செயற்கூறுகள் ஒரு நிரலை சிறு தொகுதியாக பிரிக்க உதவுகிறது.
இது குறிமுறையை எளிதாக கையாள உதவுகிறது.
2. குறிமுறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகிறது. ஒவ்வொரு முறையும்
கூற்றுகளின் வரிசைகளை நிறைவேற்றும் போது, நாம் அந்த செயற்கூற்றினை அழைத்தால் போதுமானது.
3. செயற்கூற்றின் செயல்பாடுகளை மாற்றம் செய்வது எளிதாகிறது.
வெவ்வேறு நிரலர்கள் வெவ்வேறு செயற்கூற்றில் வேலை செய்ய முடியும்.