பைத்தான் - செயற்கூறினை அழைத்தல் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions
செயற்கூறினை அழைத்தல்
எடுத்துக்காட்டு 7.2.1 ல் hello() செயற்கூறினை அழைக்க இந்த குறிமுறை
பயன்படும். "hello()” செயற்கூறினை அழைக்கும் பொழுது நிரல் பின்வரும் சரத்தை வெளியீடுகிறது.
வெளியீடு
hello - Python
மாற்றாக, "hello()” செயற்கூறினை print() செயற்கூற்றிலிருந்து
அழைப்பதை பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம்.
எடுத்துக்காட்டு:
def hello():
print ("hello - Python”)
return
print (hello())
return கூற்றில் எந்த அளபுருவும் இல்லை எனில் வெளியீட்டின் இறுதிக்
கூற்றாக, "None" வெளியிடப்படும்.
மேலே உள்ள செயற்கூறு பின்வரும் வெளியீட்டைக் கொடுக்கும்.
வெளியீடு
hello - Python
None