நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
V. குறுகிய விடை தருக.
1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
• குடியரசுத் தலைவர், ஒற்றை
மாற்று வாக்கு மூலம் விகிதச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
• வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்,
தேசிய தலைநகர் டெல்லி, மற்றும் புதுச்சேரியின்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
2. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
• காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
• இராசாங்க அமைச்சர்கள்
• இணை அமைச்சர்கள்
3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
• அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்.
• அவர் ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல்
வேண்டும்.
• அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக செயலாற்றியிருத்தல்
வேண்டும்.
• குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல்
வேண்டும்.
4. நிதி மசோதா குறிப்பு வரைக.
• நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ, அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
• மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
• இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும்.
• மாநிலங்களவை 14 நாட்டுகளுக்குள்
ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்.
5. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள்
இரண்டினைப் பட்டியலிடுக.
• இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது
இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
• இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு
உண்டு.