தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள், தேர்தல் மற்றும் பதவிக்காலம், பதவி நீக்கம், செயல்பாடுகள் - இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
துணைக் குடியரசுத் தலைவர்
63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர்
வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு
அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பதவி அமெரிக்க
துணைக் தலைவரின் குடியரசுத் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற
இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
• இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
•
35 வயது பூர்த்தி அடைந்தவராக
இருத்தல் வேண்டும்.
•
நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது
உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
•
மாநிலங்களவை உறுப்பினராவதற்கான
மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சட்டப்பிரிவு 66(1)இன் படி துணைக்
குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத்
தலைவர் போல மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக் குடியரசுத்
தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் முன்னரே
பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய
காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம். அவர் மீண்டும் துணைக்
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவராவார். மேலும்
புதிய துணைக் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்வார்.
உங்களுக்குத்
தெரியுமா?
குடியரசுத்
தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும்
பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின்
பணிகளைச் செயலாற்றுவார்.
1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
M.ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.
துணைக்
குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார்.
• மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
•
மாநிலங்களவையின்
மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
•
மாநிலங்களவையின்
தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
•
மிகப் பெரிய பிரச்சனையின்
போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும்
செய்கிறார்.
•
குடியரசுத் தலைவர்
உடல் நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும்
துணைக் குடியரசுத் தலைவர்,
அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்
முடிவு
வாக்கு (Casting
vote)
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.