நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
நடுவண் அரசு
பாடச்சுருக்கம்
•
நடுவண் அரசாங்கம்
மூன்று அங்கங்களைக் கொண்டது.
அவைகள் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியன.
•
குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர் மற்றும்
இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
•
இந்திய நாடாளுமன்றம்
மூன்று பகுதிகளைக் கொண்டது.
அவைகள், குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும்
மக்களவை (லோக் சபா).
•
இந்திய அரசின்
தலைமை வழக்குரைஞர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். அவர் குடியரசுத் தலைவரால்
நியமனம் செய்யப்படுகிறார்.
•
இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது.
•
உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
கலைச்சொற்கள்
முடிவுக்கு
கொண்டு வருதல் : Terminate bring to an untimely end.
எதிர்பாரா
செலவு நிதி : Contingency
fund an amount of money that can be used to pay for problems
that might happen.
பொது
மன்னிப்பு :
Pardon absolving
the convict of all guilt and punishment.
தண்டனை
குறைப்பு : Remission quantitative
reduction of punishment without affecting Nature of punishment.
முன்னுரிமை
: Precedence priority
of importance.
பதவியின்
நிமித்தமாக :
Ex-officio because of an office.