தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
VI. விரிவான விடையளிக்கவும்.
1. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
விடை:
• இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களின் தலைவர்கள் தங்கள் நிலப்பகுதியை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றினார்கள். இவ்வாறு சங்காலத்திற்கான அடித்தளம் வேர்கொண்டது.
சேரர்:
• சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு. (சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம்)
சோழர்:
• சோழரின் ஆட்சிப்பகுதி காவிரி வடிநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடபகுதி. தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினம் குறித்து குறிப்பிடுகிறது. இலச்சிளை புலி. (கரிகால் சோழன் கல்லணை கட்டினார்).
பாண்டியர்:
• பாண்டியரின் ஆட்சிப்பகுதி தென் தமிழகம். தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச்சங்கங்கள் குறித்து குறிப்பிடுகின்றன. மாலை வேப்பம்பூ, இலச்சிளை மீன். (பாண்டியன்
நெடுஞ்செழியன் குறித்து மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன.
2. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு 'பொருளாதாரத்தை மேம்படுத்தின?
விடை:
சங்ககாலப் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில்கள் மற்றும் கைவினைக் கலைகளின் பங்கு.
• வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பல நாடுகளுடன் நடைபெற்றது.
• உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. மாடுகள், ஆடுகள் வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.
• பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகளாக தொழிற்கூடங்கள் இருந்தன.
அன்றாட வாழ்வுக்குத் தேவையான பலவித மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. (கரிய நிறம், செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள், கருப்பு-சிவப்பு நிறத்தவை)
இரும்பை உருக்கும் உலைகள் இருந்தன (உழக்கருவிகள், வாள், ஈட்டி, கத்தி தயாரிக்கப்பட்டன.)
பலவித அணிகலன்கள், தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டன. (சுட்ட களிமண், செம்பு, தங்கம், வெள்ளி, நவமணிகள், செவ்வந்திக் கல், செம்மணிக்கல் ஆகியவற்றில் ' ஆபரணங்கள் செய்யப்பட்டன.
கண்ணாடி மணிகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டன.
சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும், முத்துக் குளித்தலும் நடைபெற்றள்ளது.
VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. சங்க காலத் தமிழகம் மற்றும் அன்றைய தமிழ் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
2. அருங்காட்சியகத்துக்குச் சென்று, பழங்காலத் தமிழர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள், அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள், கருவிகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க.
3. வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கீழடி போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுக.
4. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆய்வுக்களங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்து முறை குறித்து ஓர் ஆய்வை மேற்கொள்க.