Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : History: Industrial Revolution

   Posted On :  06.09.2023 07:06 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்கவும்.

1. தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை எவ்வாறு இருந்தன?

விடை:

தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை .

இதனால் டைஃபாயிடு , காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.

 

2. இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைக் கூறு.

விடை:

தொழிற்புரட்சியால் இங்கிலாந்து உலகின் தொழிற்பட்டறையாக மாறியது. வேளாண் உற்பத்தி பொதுவான வீழ்ச்சி கண்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

• 1840ல் 20 இலட்சமாக இருந்த லண்டன் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 50 இலட்சமாக உயர்ந்தது.

மான்செஸ்டர் ஜவுளி உற்பத்தி தொழிலின் தலைநகரமாக மாறியது, ஏராளமான மக்களை ஈர்த்தது. 1771ல் 22 ஆயிரம் மக்களுடன் மந்தமான நகராக இருந்த மான்செஸ்டர் அடுத்த 50 ஆண்டுகளில் 180 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.

 

3. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

விடை:  

நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1886 மே மாதம் 4ஆம் தேதி, சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது. • காவல் துறை பல சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தி பலரைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வுஹே மார்க்கெட் படுகொலைஎன அழைக்கப்படுகிறது.

ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.

மே-1 சர்வதேச தொழிலாளர் நாள் (மே தினம்)

 

4. லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

விடை:

• 1898 இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.

ரெனால்ட்:

• (ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.

 

5. தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

விடை:

இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு, ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச்சென்றது.

புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, அமைப்பாகத் திரண்ட தொழிலாளர் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தக் கோருதல் ஆகிய சமூகநிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கின.

Tags : Industrial Revolution | History | Social Science தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: Industrial Revolution : Answer the following questions briefly Industrial Revolution | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி