Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History: Industrial Revolution

   Posted On :  06.09.2023 07:05 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வரலாறு

அலகு பத்து

தொழிற்புரட்சி


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

) ஆர்க்ரைட்

() சாமுவேல் கிராம்ப்டன்

() ராபர்ட் ஃபுல்டன்

() ஜேம்ஸ் வாட்

விடை:

() ராபர்ட்ஃபுல்டன்


2. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

() நிலம் கிடைக்கப் பெற்றமை

() மிகுந்த மனித வளம்

() நல்ல வாழ்க்கைச் சூழல்

() குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

விடை:

() குளிர்ச்சியான தட்பவெப்பநிலை


3. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

) எலியாஸ் ஹோவே

() எலி-விட்னி

() சாமுவேல் கிராம்டன்

() ஹம்ப்ரி டேவி

விடை:

() எலியாஸ் ஹோவே


4. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

() டி வெண்டெல்

() டி ஹிண்டல்

() டி ஆர்ம ன்

() டி ரினால்ட்

விடை:

() டி வெண்டெல்


5. சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

() எப்.டி. ரூஸ்வெல்ட்

() ஆண்ட்ரூ ஜேக்சன்

() வின்ஸ்ட ன் சர்ச்சில்

() உட்ரோ வில்சன்

விடை:

() ஆண்ட்ரூ ஜேக்சன்


6. கீழ்க்காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?

() சுதந்திர தினம்

() உழவர் தினம்

() உழைப்பாளர் தினம்

() தியாகிகள் தினம்

விடை:

() உழைப்பாளர் தினம்


7. எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

() இங்கிலாந்து

() ஜெர்மனி

() பிரான்ஸ்

() அமெரிக்கா

விடை:

() ஜெர்மனி


8. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

() லூயி ரெனால்ட்

() ஆர்மாண்ட் பீயூகாட்

() தாமஸ் ஆல்வா எடிசன்

() மெக் ஆடம்

விடை:

() ஆர்மாண்ட் பீயூகாட்


9. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?

() உருட்டாலைகள்

() பஞ்சுக் கடைசல் இயந்திரம்

() ஸ்பின்னிங் மியூல்

() இயந்திர நூற்புக் கருவி

விடை:

() பஞ்சுக் கடைசல் இயந்திரம்

 

10. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

() கற்கரி

() கரி

() விறகு ,

() காகிதம்

விடை:

() கரி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1. ............ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

விடை:

சாசன இயக்க வாதிகள்

2. ........... உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.

விடை:

ஜான் லவுடன் மெக் ஆடம்

3. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ………………….. கண்டுபிடித்தார்

விடை:

ஹென்றி பெஸ்ஸிமர்

4. விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ........... ஆவார்.

விடை:

கார்ல் மார்க்ஸ்

5. ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ......... ஆண்டில் இயக்கப்பட்டது

விடை:

டிசம்பர் 1835 ஆம் ஆண்டு

 

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

1. (i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.

(ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.

(iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.

(iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.

) i) சரி

) ii) மற்றும் iii) சரி

) i) மற்றும் iv) சரி

) iii) சரி

விடை:

) i) மற்றும் iv) சரி


2. (i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.

(ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.

(iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.

(iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை .

) i) சரி

) ii) மற்றும் iii) சரி

)i) மற்றும் iv) சரி

) iii) சரி

விடை:

எதுவும் இல்லை


3. கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்.

காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.

) கூற்று சரி காரணம் தவறு

)கூற்று, காரணம் இரண்டுமே தவறு

) கூற்று, காரணம் இரண்டுமே சரி

) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

விடை:

) கூற்று காரணம் இரண்டும் தவறு

 

4. கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

)கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

)கூற்று, காரணம் இரண்டுமே தவறு

) கூற்று, காரணம் இரண்டுமே சரி

விடை:

) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

 

IV. பொருத்துக.

1 பென்ஸ் - அமெரிக்கா

2 பாதுகாப்பு விளக்கு - லூயி ரெனால்ட்

3. நான்கு சக்கர வாகனம் - ஹம்பரி டேவி 

4. மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம் - லங்காஷையர்

5. நிலக்கரி வயல் - ஜெர்மனி

விடை:

1 பென்ஸ் - ஜெர்மனி

2 பாதுகாப்பு விளக்கு - ஹம்பரி டேவி

3. நான்கு சக்கர வாகனம் - லூயி ரெனால்ட்

4. மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம் - அமெரிக்கா

5. நிலக்கரி வயல் - லங்காஷையர்

Tags : Industrial Revolution | History | Social Science தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: Industrial Revolution : One Mark Questions Answers Industrial Revolution | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொழிற்புரட்சி