தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின்
_____________ பகுதியில் காணப்படுகிறது.
அ) புறணி
ஆ) பித்
இ) பெரிசைக்கிள்
ஈ) அகத்தோல்
2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப்
பண்பாகும்?
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலைகள்
ஈ) மலர்கள்
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து
காணப்படுவது _____________ எனப்படும்.
அ) ஆரப்போக்கு அமைப்பு
ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ) ஒன்றிணைந்தவை
ஈ) இவற்றில் ஏதுமில்லை
4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
அ) கார்போஹைட்ரேட்
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) அசிட்டைல் கோ.ஏ
ஈ) பைருவேட்
5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
அ) பசுங்கணிகம்
ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி(ஸ்ட்ரோமா)
இ) புறத்தோல் துளை
ஈ) மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன்
உற்பத்தியாகிறது?
அ) ATP யானது ADP யாக மாறும் போது
ஆ) CO2 நிலை
நிறுத்தப்படும் போது
இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ) இவை அனைத்திலும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. புறணி இதனிடையே உள்ளது புறத்தோல்
மற்றும் அகத்தோல்.
2. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும்
வாஸ்குலார் கற்றை இணைப்புத்திசு.
3. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம் சைட்டோபிளாசம்.
4. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் H2O(நீர்) லிருந்து
கிடைக்கிறது.
5. செல்லின் ATP உற்பத்தி
தொழிற்சாலை மைட்டோகாண்டீரியா.
III. சரியா தவறா? தவறு எனில்
கூற்றினை திருத்துக.
1. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு
புளோயம்.
விடை: தவறு
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.
2. தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும்
மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
விடை: சரி
3. ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும்
புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
விடை: தவறு
ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும்
இடையில் கேம்பியம் காணப்படாது.
4. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு
கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
விடை: தவறு
இருவித்திலைத் தாவர இலை மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட்
பாரன்கைமா உள்ளது.
5. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
விடை: சரி
6. காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP
மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
விடை: தவறு
காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
IV. பொருத்துக:
1, புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை - டிரசீனா
2, கேம்பியம் - உணவு கடத்துதல்
3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை - பெரணிகள்
4. சைலம் - இரண்டாம் நிலை
வளர்ச்சி
5. புளோயம் - நீரைக் கடத்துதல்
விடை:
1, புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை - பெரணிகள்
2, கேம்பியம் - இரண்டாம் நிலை
வளர்ச்சி
3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை - டிரசீனா
4. சைலம் - நீரைக் கடத்துதல்
5. புளோயம் - உணவு கடத்துதல்
V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து
காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு
செய்க.
அ. காரணம், கூற்று இரண்டும்
சரியாக இருக்குமானால், காரணமானது கூற்றுக்கு சரியான
விளக்கமாக அமைகிறது.
ஆ. காரணம், கூற்று இரண்டும்
சரியாக இருக்கிறது ஆனால் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாக அமையவில்லை.
இ. கூற்று சரியாக இருக்கிறது ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1) கூற்று : ஒரு செல்லானது தனக்கு தேவையான ஆற்றலை
நேரடியாக குளுக்கோஸிலிருந்து பெறாது.
காரணம் : சுவாசத்தின் போது குளுக்கோஸிலிருந்து
ஆற்றலானது ATP மூலக்கூறு வழியாக
செல்லுக்கு கிடைக்கிறது.
பதில் : (அ) காரணம், கூற்று இரண்டும் சரியாக இருக்குமானால், காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாக அமைகிறது.
2) கூற்று : ஒளி சார்ந்த வினையில் கார்பன் டை ஆக்ஸைடு ஒடுக்கப்பட்டு
கார்போஹைட்ரேட்டாக கிடைக்கிறது.
காரணம் : ஒளி சார்ந்த வினை ATP மற்றும் NADPH2 உதவியுடன்
கார்போஹைட்ரேட்டை உருவாக்குகிறது.
பதில் : (அ) காரணம், கூற்று இரண்டும் சரியாக இருக்குமானால், காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாக அமைகிறது.
3) கூற்று : இருவித்திலை தாவர வேரில் சைலமானது
எக்ஸ்சார்க் மற்றும் டெட்ராக்ஆர்க் ஆகும்.
காரணம் : இரு வித்திலை தாவர வேரில்
புரோட்டோசைலமானது மையத்தை நோக்கி செல்கிறது.
பதில் : (ஆ) காரணம், கூற்று இரண்டும் சரியாக இருக்கிறது ஆனால்
காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாக அமையவில்லை.
4) கூற்று : இருவித்திலை தாவர தண்டில் கோலன்கைமா
செல்கள் ஹைப்போடெர்மிஸ் பகுதியில் அமைந்துள்ளது.
காரணம் : கோலன்கைமா செல்கள் இருவித்திலை
தண்டிற்கு வளைவு தன்மையை கொடுக்கிறது.
பதில் : (அ) காரணம், கூற்று இரண்டும் சரியாக இருக்குமானால், காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாக அமைகிறது.
5) கூற்று : ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில்
புளோயமானது உள்நோக்கி அமைந்துள்ளது.
காரணம் : ஒரு வித்திலை தாவர தண்டில் கேம்பியம் பட்டை
அமைந்துள்ளது.
பதில் : (ஈ) கூற்று மற்றும் காரணம்
இரண்டும் தவறு.
6) கூற்று : இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சு
பாரன்கைமா வாயு பரிமாற்றத்தில் உதவுகிறது.
காரணம் : இரு வித்திலை தாவர இலையில் புறத்தோலில்
புல்லிபார்ம் செல் அமைந்துள்ளன.
பதில் : இ) கூற்று சரியாக இருக்கிறது ஆனால்
காரணம் தவறு.
VI. ஒரிரு வார்த்தைகளில் விடையளி:
1. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
• சைலமும்
புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன. இவற்றில் இருவகைகள் உள்ளன.
• ஒருங்கமைந்தவை
• இருபக்க ஒருங்கமைந்தவை
2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து
பெறப்படுகிறது?
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை
ஆக்ஸைடிலிருந்து கிடைக்கிறது.
3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா
சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
காற்று சுவாசத்திற்கும், காற்றில்லா
சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்காலிசிஸ்.
4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக
வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின்
பெயர் காற்றில்லா சுவாசம் (நொதித்தல்)
VII. குறு வினாக்கள் :
1. இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார்
கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
• வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை
• ஒருங்கமைந்தவை
• திறந்தவை
• உள்நோக்கு சைலம் கொண்டவை
2. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
• மேல்புறத் தோலுக்கும், கீழ்புறத்தோலுக்கும்
இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும்.
இருவித்திலைத் தாவர இலையிடைத்திசு பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா
என இரு வகை செல்கள் உள்ளன.
• ஒரு வித்திலை தாவர இலையிடைத்திசு பாலிசேட் மற்றும்
ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது.
• செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன்
கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.
3. ஒரு ஆக்ஸிசோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
4. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான
திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
• தோல் திசுத்தொகுப்பு அல்லது புறத்தோல்
திசுத்தொகுப்பு
• அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு
• வாஸ்குலார் திசுத்தொகுப்பு
5. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
• ஒளிச்சேர்க்கை என்பது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும்
நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில்
கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது.
• ஒளிச்சேர்க்கை பசுங்கணிகங்களில் நடைபெறுகிறது.
6. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு
ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும்
NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
7. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
கார்பன் டை ஆக்ஸைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன் ↑
VIII. நெடு வினாக்கள் :
1. வேறுபாடு தருக.
அ) ஒருவித்திலை தாவர வேர் மற்றும் இருவித்திலை தாவர வேர்
விடை:
அ) ஒருவித்திலை தாவர வேர் மற்றும் இருவித்திலை
தாவர வேர்
இருவித்திலைத் தாவரவேர்
1. சைலக்கற்றைகளின் எண்ணிக்கை : நான்குமுனை சைலம்
2. கேம்பியம் : காணப்படுகிறது (இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொழுது மட்டும்)
3. இரண்டாம் நிலை வளர்ச்சி : உண்டு
4. பித் அல்லது மெடுல்லா : இல்லை
ஒருவித்திவைத் தாவரவேர்
1. சைலக்கற்றைகளின் எண்ணிக்கை : பலமுனை சைலம்
2. கேம்பியம் : காணப்படவில்லை
3. இரண்டாம் நிலை வளர்ச்சி : இல்லை
4. பித் அல்லது மெடுல்லா : உண்டு
ஆ) காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா
சுவாசம்
காற்று சுவாசம்
நடைபெறும் இடம் : சைட்டோபிளாசம்
மற்றும் மைட்டோகாண்டீரியா
விளைப்பொருள் : கார்பன்டை ஆக்ஸைடு,
நீர், மற்றும் ஆற்றல்
இதன் தேவை : ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் மூலம் ஆற்றல் உருவாகிறது
வெளிப்படும் ATP எண்ணிக்கை : 38 ATP
காற்றில்லா சுவாசம்
நடைபெறும் இடம் : சைட்டோபிளாசம்
விளைப்பொருள் : கார்பன் டை ஆக்ஸைடு,
லாக்டீக் அமிலம் (விலங்கு செல்) எத்தனால் (தாவரசெல்) மற்றும்
ஆற்றல்.
இதன் தேவை : ஆற்றல் உருவாக ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் தேவை இல்லை.
வெளிப்படும் ATP எண்ணிக்கை : 2 ATP
2. காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு
குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படி
நிலைகளை எழுதி விவரிக்கவும்.
விடை:
காற்று சுவாசம்:
இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் முழுவதுமாக
ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர்
மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும்
விலங்குகளில் நடைபெறுகிறது.
C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP
காற்றுச் சுவாசத்தின் படிநிலைகள்
அ) கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):
இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3
கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும். இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
ஆ) கிரப்
சுழற்சி:
இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம்
- matrix) கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான
இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை
ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை
கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
இ) எலக்ட்ரான்
கடத்தும் சங்கிலி அமைப்பு:
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி
என்ற எலக்ட்ரான்களைகடத்தும் அமைப்பு உள்ளது. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப்
சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில்
உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+
ஆக ஆக்ஸிகரணமடைகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP
யால் எடுத்துக்கொள்ளப்பட்டு ATP ஆக
உருவாகிறது. இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக
(H2O) ஒடுக்கமடைகிறது.
3. ஒளிச் சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு
ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள்
யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு
நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
விடை:
ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு:
ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே
நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின்
ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.
1. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை (ஹில்வினை)
இது ராபின் ஹில் (1939) என்பவரால்
முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலகாய்டு
சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை
உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.
2. ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர்பொருள்
உற்பத்தி நிலை)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது
கார்போஹைட்ரேட்டாக ஓடுக்கமடைகிறது. இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில்
நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு
சூரிய ஒளி தேவை இல்லை.
கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம்
உள்நுழைகிறது.
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)
1. ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல்
நிகழ்ச்சியாகும்.
அ) ஒளிவினையின் போதும், இருள்வினையின் போதும் மனிதனுக்கு தேவையான முக்கிய பொருள்கள்
கிடைக்கின்றன. அவை யாவை?
ஆ) ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில்
ஈடுபடும் சில வினைபடுபொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடுகின்றன அந்த வினைபடு பொருட்களை
குறிப்பிடுக.
விடை:
அ)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன்
CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
ஆ)
• ஒளிச்சேர்க்கையானது இரண்டு செயல் வினைகளில் நடைபெறுகிறது.
• ஒளிவினை மூலம் மற்றும் இருள்வினை (கால்வின் கழற்சி) ஒளி வினையின்
மூலம் ATP மற்றும் NADPH2 உருவாகிறது.
• கால்வின் சுழற்சியில் வினைபடு பொருள் குளுக்கோஸ் மூலமாக கூடுதல்
கார்பன் டை ஆக்ஸைடுவை உருவாக்குகிறது.
• இந்த சுழற்சி மூலம் NAP+ ADP + Pi ஒளிவினை மூலமாக உருவாக்குகிறது. இதனுடன் நீர் மூலக்கூறு இணைந்து ATP
மற்றும் NADPH2 யை மீண்டும்
உருவாக்குகிறது.
2. பசுங்கணிகத்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த
செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
• ஒளிசார்ந்த வினை தைலக்காய்டு (கிரானா) பகுதியில் நடைபெறுகிறது.
• ஒளிசாரா வினை (கால்வின் சுழற்சி) ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.