தாவர செயலியல் - சுவாசித்தலின் வகைகள் | 10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology
சுவாசித்தலின்
வகைகள்
சுவாசித்தல் என்பது
உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற
நிகழ்ச்சியாகும்.
தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து
ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இந்த வாயு
பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.
செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர் வேதியியல்
நிகழ்ச்சியே செல்சுவாசம் எனப்படும்.
இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன்
உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும்
ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும்
விலங்குகளில் நடைபெறுகிறது.
C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP
அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு): இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு
மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும்
நிகழ்ச்சியாகும். இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது காற்று
மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
ஆ. கிரப்சுழற்சி: இந்நிகழ்ச்சி
மைட்டோகாண்ட்ரியாவின்
உட்கூழ்மத்தில்
நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix)
கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு
பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக
மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில
சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
இ. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு: மைட்டோகாண்ட்ரியாவின்
உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு
உள்ளது. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2
மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு
வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக்கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது.
இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும். இந்நிகழ்சியின்
போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.
காற்றில்லா சுழலில் அதாவது
ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறும் சுவாசமாகும். இதில் குளுக்கோஸானது எத்தனாலாகவும்
(ஈஸ்டினால் மதுபான நொதித்தல்) அல்லது லேக்டிக் அமிலமாகவும் (பாக்டீரியங்களால் பால்
புளித்தல்) மாற்றப்படுகிறது. உடன் CO2 வெளியேறுகிறது.
C6H12O6 →
2CO2 + 2C2H5OH + ஆற்றல் (ATP)
சுவாசித்தலின் போது
வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்ஸிஜன்
அளவிற்கும் இடையேயுள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்.