இருவிதையிலைத்
தாவர இலையின் உள்ளமைப்பு
(மேல்கீழ்
வேறுபாடு கொண்ட இலை – மா)
இருவிதையிலைத் தாவர இலையின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் உள்ளன.
(i) மேல்புறத்தோல் : ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா
செல்களால் ஆனது. மேல் புறத்தோலின் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம் உள்ளது.
இலைத்துளைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
(ii) கீழ்புறத்தோல்: வெளிப்புறத்தில் கியூடிக்கிளுடன்
ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இதில் பல
இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு
செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன.
(iii) இலையிடைத்திசு: மேல்புறத் தோலுக்கும்
கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில்
எனப்படும். இதில் பாலி சேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை
செல்கள் உள்ளன.
அ. பாலிசேட் பாரன்கைமா: மேல்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான
செல்கள், அதிக பசுங்கணிகங்களுடன்
காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
ஆ. ஸ்பாஞ்சி பாரன்கைமா: இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ
அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல்
இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
வாஸ்குலார்
கற்றைகள்:
வாஸ்குலார் கற்றைகள் மைய நரம்பில் மற்றும் பிற நரம்புப் பகுதிகளில் அமைந்துள்ளது.
வாஸ்குலார்கற்றைகள்,
ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை.
ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன கற்றை உறை உள்ளது.
வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல் புறத்தோலை நோக்கியும், புளோயம்
கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது
இருவிதையிலைத் தாவர மற்றும் ஒருவிதையிலைத் தாவர இலைகளுக்கிடையேயான வேறுபாடுகள்