தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology
தாவர உள்ளமைப்பியல்
மற்றும் தாவர செயலியல்
நினைவில்
கொள்க
• திசுக்கள் என்பது ஒரே
மூலத்திலிருந்து தோன்றிய ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கின்ற ஒரே மாதிரியான அல்லது
வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும்.
• தாவரங்கள் சூரிய ஒளியின்
முன்னிலையில் CO2
மற்றும் H2O உதவியினால்
கார்போஹைட்ரேட் தயாரிக்கும் நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை எனப்படும்.
• ஒளிவினையானது பசுங்கணிகத்தின்
கிரானா பகுதியில் நடைபெறுகிறது.
• இருள் வினையானது பசுங்கணிகத்தின்
ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.
• சுவாசித்தல் இரண்டு நிகழ்ச்சிகளை
உள்ளடக்கியது. அவை வெளிச்சுவாசம் மற்றும் செல்சுவாசம்.
• ஆக்ஸிஜன் முன்னிலையில் நடைபெறும்
சுவாசம் காற்று சுவாசம் எனப்படும்.
• காற்று சுவாசம் 3 படிநிலைகளில்
நடைபெறுகிறது. அவை கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி மற்றும்
எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு.