Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்)
   Posted On :  31.07.2022 06:41 am

10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்)

ஒருவிதையிலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் காணப்படுகிறது.

ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்)

ஒருவிதையிலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் காணப்படுகிறது.


1. எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ்: ஒரு விதையிலைத் தாவர வேரின் வெளிப்புற அடுக்கு மெல்லிய சுவருடைய ஒரு அடுக்காலான பாரன்கைமா செல்களால் ஆனது. இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூட்டிக்கிள் காணப்படவில்லை. வேர்த்தூவிகள் மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களை உறிஞ்சுகின்றன. இவ்வடுக்கு உட்புறத்திசுக்களைப் பாதுகாக்கிறது.

ii. புறணி: புறணி பல அடுக்கு நெருக்கமற்ற பாரன்கைமா செல்களாலானது. இவை நீர் மற்றும் உணவினைச் சேமிக்கின்றன.

iii. அகத்தோல்: புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகும். அகத்தோலில் காஸ்பேரியன் பட்டைகள் மற்றும் வழிச் செல்கள் காணப்படுகின்றன. காஸ்பேரியன் பட்டைகள் சூபரின் என்ற பொருளால் ஆன பட்டைகளாகும்.

iv. ஸ்டீல்: அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த அனைத்து திசுக்களும் சேர்ந்து ஸ்டீல் எனப்படும். இது பெரிசைக்கிள், வாஸ்குலார்த் தொகுப்புகள், பித் ஆகியவற்றை கொண்டுள்ளது.

அ. பெரிசைக்கிள்: இது ஓரடுக்கு மெல்லிய சுவருடைய பாரன்கைமா செல்களால் ஆனது. பக்கவாட்டு வேர்கள் இதிலிருந்து தோன்றுகிறது.

ஆ. வாஸ்குலார் திசுக்கள் : வாஸ்குலார் திசுக்கள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன. பலமுனைகளைக் கொண்ட புரோட்டோசைல கூறுகள் காணப்படுவதால் இவை பலமுனை சைலம் எனப்படும். சைலம் வெளிநோக்கியவை. ஸ்கிளிரன்கைமாவாலான இணைப்புத்திசு உள்ளது.

இ. பித்: மையப்பகுதியில் பித் காணப்படுகிறது. இது செல் இடைவெளிகளுடைய பாரன்கைமா செல்களால் ஆனது. இந்த செல்களில் தரசம் (ஸ்டார்ச்) போன்ற பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன.


இருவிதையிலைஒரு விதையிலைத் தாவரவேர் – வேறுபாடுகள்


 

10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology : Internal Structure of Monocot Root (Maize) in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் : ஒருவிதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்) - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்