ஒருவிதையிலைத்
தாவர இலையின் உள்ளமைப்பு (இருபுறமும் ஒத்த அமைப்புடைய இலை - புல்)
ஒருவிதையிலைத் தாவர இலையின்
உள்ளமைப்பில் கீழ்கண்ட பகுதிகள் காணப்படுகின்றன.
(i) புறத்தோல்: மேல் புறத்தோல் மற்றும்
கீழ்ப்புறத்தோல் காணப்படுகிறது. புறத்தோலானது பாரன்கைமா செல்களால் ஆனது. இரண்டு
புறத்தோலின் வெளிப்புறமும் கியூட்டிக்கிள் படலமும், புறத்தோல் துளை (ஸ்டோமேட்டா)களும் உள்ளன.
மேல்புறத்தோலின் சில செல்கள் மெல்லிய சுவருடன் பெரிதாக உள்ளது. இவை புல்லிபார்ம்
செல்கள் எனப்படுகின்றன.
(ii) இலையிடைத்திசு
:
மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு இலையிடைத்திசு
எனப்படும். இலையிடைத்திசு பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி
காணப்படுகிறது. செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள்
காணப்படுகின்றன. (iii) வாஸ்குலார் கற்றைகள் : அளவில் சிறியதும் பெரியதுமான பல
வாஸ்குலார் கற்றைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமா
செல்களால் ஆன கற்றை உறை உள்ளது. வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை
மற்றும் மூடியவை வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும் புளோயம்
கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.
இருவிதையிலைத்
தாவர மற்றும் ஒருவிதையிலைத் தாவர இலைகளுக்கிடையேயான வேறுபாடுகள்