தாவரச்செயலியல்
தாவரங்கள் மற்றும் ஆல்காக்களின்
கணிகங்கள் இரட்டைச்சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் ஆகும். இவை உணவு உற்பத்தி
மற்றும் சேமிப்பதில் ஈடுபடுகின்றன. மூன்று வகையான கணிகங்கள் உள்ளன.
பசுங்கணிகம் (குளோரோபிளாஸ்ட்) - பச்சைநிறமுடைய கணிகம்
வண்ணக்கணிகம் (குரோமோபிளாஸ்ட்) - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்ச் நிறமுடைய கணிகம்
வெளிர்க்கணிகம்
(லியூக்கோபிளாஸ்ட்) - நிறமற்ற கணிகம்
பச்சைய நிறமிகளை (chlorophyll) கொண்டுள்ள
கணிகம் பசுங்கணிகம். பசுங்கணிகம் 2 - 10 மைக்ரோமீட்டர்
விட்டமும் 1 - 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள்
உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பாகும்.
1. உறை:
பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
2. ஸ்ட்ரோமா: சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி
உள்ளது. இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70S ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.
3. தைலக்காய்டு: ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பைபோன்ற தட்டுவடிவ அமைப்பு
காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர். இவற்றில் ஒளிச்சேர்க்கை நிறமிகள்
உள்ளன.
4. கிரானா: பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம்
போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது பல கிரானாக்கள் ஒன்றோடொன்று
ஸ்ட்ரோமா லேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது.
1. ஒளிச்சேர்க்கை 2.
தரசம் சேமித்தல் 3. கொழுப்பு அமில உற்பத்தி 4.
லிப்பிடுகள் சேமிப்பு 5. பசுங்கணிகம்
உருவாக்கம்.
ஒளிச்சேர்க்கை என்பது (photo = light, synthesis = to
build) தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள்,
தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட
பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே
தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்ஸைடு
மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில்
பசுங்கணிகத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது
ஆக்ஸிஜன் (உயிர்வளி) வெளியேற்றப்படுகிறது
பசுமையான தாவரங்களில் குறிப்பாக
இலைகளில் ஒளிச் சேர்க்கையானது நடைபெறுகிறது.
ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும்
நிறமிகள் ஒளிச்சேர்க்கை நிறமிகள் எனப்படுகின்றன. இரண்டு முக்கிய நிறமிகள் உள்ளன.
அவை முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறிமிகள் பச்சையம் a முதன்மை
நிறமியாகும். இவை சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகும். இந்த
நிறமியானது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது. ஆகையால் இது வினைமையம்
என்று அழைக்கப்படுகிறது. ஏனைய நிறமிகளான பச்சையம் b மற்றும்
கரோட்டினாய்டு போன்றவை துணை நிறமிகள் ஆகும். இவை சூரிய ஆற்றலை கவர்ந்து
முதன்மை நிறமிக்கு அனுப்பிவிடும். முதன்மை நிறமி (வினைமையம் - பச்சையம் a) மற்றும் துணை நிறமிகள் (ஏற்பி நிறமி மூலக்கூறுகள் மையம்) இரண்டும்
சேர்ந்து ஒளித்தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது.
ஒளிச்சேர்க்கையின் முழு
நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது
ஒளிவினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின்
ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.
1. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை (ஹில்வினை)
இது ராபின் ஹில் (1939) என்பவரால்
முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலகாய்டு
சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை
இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.
2. ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர்பொருள் உற்பத்தி நிலை)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த
வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது
கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது. இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில்
நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு
சூரிய ஒளி தேவை இல்லை. எனவே இது இருள் வினை எனப்படும்.
கால்வின் சுழற்சியில்
காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம்
உள் நுழைகிறது.
மேலும் தெரிந்து கொள்வோம்
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு
செல்லானது நேரிடையாக ஆற்றலை குளுக்கோஸிலிருந்து பெறமுடியாது. சுவாசித்தலின்
போது குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து வெளியேறும் ஆற்றல் ATP யில் சேமிக்கப்படுகிறது.
மெல்வின்
கால்வின் அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை
கண்டறிந்தார். அதனால் இச்சுழற்சி கால்வின் சுழற்சி என பெயரிடப்பட்டது. இதற்காக
இவருக்கு 1961 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தகவல் துளிகள்
சூரிய ஒளியைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி
நடத்தப்பட்டது. பாரத ரத்னா C.N.R ராவ் அவர்கள் அதே
தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன்
எரிபொருளை உற்பத்தி செய்தார். (புதுப்பிக்கும் ஆற்றல்)
அ. உட்புறக் காரணிகள்
1. நிறமிகள் ii.
இலையின் வயது iii. கார்போஹைட்ரேட்டின்
செறிவு iv. ஹார்மோன்கள்
ஆ. வெளிக்காரணிகள்
i) சூரிய ஒளி ii)
கார்பன் டை ஆக்ஸைடு iii) வெப்பநிலை iv) நீர் v) கனிமங்கள்