அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
VI. விரிவான விடை தருக.
1. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
நேர்முக வரிகள் :
நேர்முக வரி என்பது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக
விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது
மாற்ற முடியாது.
வருமான வரி :
• இவ்வரி தனி
நபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
• இவ்வரி வசூலிக்கப்படும்
விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக் கூடியதாகும்.
நிறுவன வரி :
• இந்த வரி தங்கள்
பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும்.
• நிறுவனங்களுக்கு
விதிக்கப்படுகிறது.
• இந்தவரி வெளிநாட்டு
நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.
சொத்து வரி (அ) செல்வ வரி :
• தனது சொத்திலிருந்து
பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
• ஒவ்வொரு ஆண்டும்
சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
• இவ்வரி தனிநபர்கள்
மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
மறைமுக வரிகள் :
ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச் சுமையை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால்
அது ‘மறைமுக வரி' எனப்படும்.
வரி விதிக்கப்பட்டவர், வரி வேறு. வரி சுமையை சுமப்பவர் வறு ஒருவராவர்.
முத்திரைத்தாள் வரி :
அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற வரிகளான திருமண பதிவு அல்லது
சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் பது விதிக்கப்படுவதாகும்.
பொழுதுபோக்கு வரி:
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு
வரியாகும். உதாரணமாக, திரைப்படங்கள் பார்ப்பதற்காக
விதிக்கப்படுகின்ற வரி.
2. GST யின் அமைப்பை எழுதுக.
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): மாநிலத்திற்குள்
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு
வரி, உடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி,
மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.
மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): மாநிலத்திற்குள்
மத்திய சுங்கத்தீர்வை, சேவை
வரி, எதிர்வரி, கூடுதல் ஆயத்தீர்வை,
கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலை கல்வி வரி)
ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): மாநிலங்களுக்கு இடையே
நான்கு முக்கிய GST விகிதங்கள்
உள்ளன. 5%, 12%, 18% மற்றும் 28% காய்கறிகள்
மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளுக்கான
அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
3. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
• கருப்பு பணம்
என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத
வரிப் பணமாகும்.
• வரி நிர்வாகியிடமிருந்து
மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ‘கருப்பு பணம்’ என்று அழைக்கப்படுகிறது.
கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
• பண்டங்கள்
பற்றாக்குறை
• கடத்தல்
• உரிமம் பெறும்
முறை
• வரியின் அமைப்பு
• தொழில் துறையின்
பங்கு
VII. செயல்முறைகள் மற்றும்
செயல்பாடு.
1. உள்ளூரில் விதிக்கப்படும் வரிகளைப் பற்றிய விவரங்களை
சேகரிக்கவும். (குடிநீர், மின்சாரம் மற்றும்
வீட்டுவரிகள் போன்றவைகள்)
மாணவர் செயல்பாடு.
2. மாணவர்கள் சில புத்தகங்களை அங்காடிகளில் வாங்கும்படி
கூறுதல். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அப்புத்தகங்களின்
அதிகபட்ச சில்லரை விலையையும், வாங்கும் விலை அல்லது
GST பற்றி அறிதல்.
மாணவர் செயல்பாடு.