வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு
எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது. பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.
இன்றைய உலகில் நாம் அனைத்து உலக நாடுகளுடனும் நட்பான உறவைப் பராமரித்தல் அவசியமானதாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலமும், மூலதனம் மற்றும் உழைப்பைப் பரிமாற்றம் செய்வதன் மூலமும் நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க முடியும். இந்த சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நாம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம். இதேபோல், மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை மாநிலத்திற்குள் நடத்துகிறது.
நடுவண் மற்றும் மாநில அரசுகள் நமது உரிமைகள், சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏராளமான சட்டங்களை இயற்றுகின்றன. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றங்களை அமைத்துள்ளன. மேலும், அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.
அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது. வருவாய் துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும். உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றல் போன்ற பொதுப்பணிகளை வழங்குகின்றன.
6. வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு
முன்னதாக குறிப்பிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் பல்வேறான வரிகளை வசூலிக்கின்றன. அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிகவரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது. சில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது. மேலும், வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது.
7. பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல்
நடுவண் அரசு, பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை இந்திய மைய வங்கி மூலம் கட்டுப்படுத்துகிறது. இதன் விகிதங்களில் அதிக ஏற்ற இறக்கங்களை களைவதே மைய வங்கியின் முக்கிய நோக்கமாகும். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலமாகவும் மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மலிவு விலையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.