வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது?
வளர்வீத வரி விதிப்பு முறை, விகித வரி விதிப்பு முறை மற்றும் தேய்வுவீத வரி விதிப்பு முறை என அரசாங்கம் வரிகளை விதிக்கின்றன.
வளர்வீத வரி விதிப்பு
முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும்போது (பெருக்கப்படும்) வரி விகிதமும்
(பெருகி) அதிகரிக்கிறது. ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் வருமானம்
அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டு
ஒரு நிலையான அளவில்
பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித
வரி விதிப்பு முறை எனப்படுகிறது. அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள்
வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
எடுத்துக்காட்டு
இது அதிக வருமானம்
ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம்
விதிப்பதைக் குறிக்கிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர்
மாறானதாகும்.