பொருளியல் - வரி ஏய்ப்பு (Tax Evasion) | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
வரி ஏய்ப்பு (Tax Evasion)
தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
• வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
• விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
• மறைக்கப்பட்ட பணம்.
• கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.
1. ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபாரதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
2. பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
3. வரிஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.