பொருளியல் - அரசாங்கமும் வரிகளும் | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
அரசாங்கமும்
வரிகளும்
• வளர்ச்சிக்
கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் பங்கு பற்றி புரிந்துகொள்ளுதல்
• வரி மற்றும் அதன்
வகைகளைப் பற்றிய அறிவைப்பெறுதல்
• வரி எவ்வாறு
விதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிப்படித்தல்
• கருப்பு
பணத்திற்கும், வரி ஏய்ப்பிற்கும் உள்ள நோக்கத்திற்கான அறிவைப்பெறுதல்
• வரிக்கும், மற்ற
கட்டணத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள்ளுதல்
• வரிகளும் மற்றும்
அவற்றின் முன்னேற்றம் பற்றியும் புரிந்துகொள்ளுதல்
அறிமுகம்
ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி
விதிக்கப்படுகிறது. அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து
உள்ளது நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக
வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன. இதன் மூலம்
அரசாங்கம் அதன் "நிதி ஆதாரங்களை” திரட்டுகிறது.