அரசாங்கமும் வரிகளும் | பொருளியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
V. குறுகிய விடை தருக.
1. வரி வரையறுக்க.
பேராசியர் செலிக்மேன் கருத்துப்படி, 'வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
அரசிடமிருந்து எந்த வித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக
செலுத்த வேண்டியதே வரி' என வரையறை கூறுகிறார்.
2. அரசுக்கு ஏன் வரி செலுத்த வண்டும்?
• ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது.
• அரசின் வருமானம்
நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது.
• நேர்முக வரியானது
தனிநபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள்
மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன.
• இதன் மூலம்
அரசாங்கம் அதன் ‘நிதி ஆதாரங்களை’ திரட்டுகிறது.
3. வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
வரிகளின் வகைகள் இரண்டு வகைப்படும். அவை: நேர்முக வரிகள், மறைமுக வரிகள்.
நேர்முக வரிகள் :
• வருமான வரி
• நிறுவன வரி
• சொத்து வரி (அ) செல்வ வரி
மறைமுக வரிகள் :
• முத்திரைத்தாள்
வரி
• பொழுதுபோக்கு
வரி
• சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி
4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சிறு குறிப்பு வரைக.
• மறைமுக வரிகளில்
ஒன்றாகும்.
• இந்தியப் பாராளுமன்றத்தில்
மார்ச் மாதம் 29 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
• ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
• இதன் குறிக்கோள்
‘ஒரு நாடு! ஒரு அங்காடி!
ஒரு வரி' என்பதாகும்.
5. வளர் வீத வரி என்றால் என்ன?
• வரியின் அடிப்படைத்
தளம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் அதிகரிக்கிறது.
• வருமானம் அதிகரிக்கும்
போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.
6. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
• கருப்பு பணம்
என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத
வரிப் பணமாகும்.
• வரி நிர்வாகியிடமிருந்து
மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ‘கருப்பு பணம் என்று அழைக்கப்படுகிறது.
7. வரி ஏய்ப்பு என்றால் என்ன?
தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும்
அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
8. வரிக்கும், கட்டணத்திற்கும் உள்ள
வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
வரி (Tax)
1. வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்
அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.
2. வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.
கட்டணம்
(Payments)
1. கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
2. கட்டணம் என்பது தன்னார்வக் கட்டணமாகும்.