இயக்க விதிகள் | அறிவியல் - சரியான விடையைத் தேர்வு செய்க | 10th Science : Chapter 1 : Laws of Motion
இயக்க விதிகள் – அறிவியல்
I. சரியான
விடையைத் தேர்வு செய்க.
1. கீழ்க்கண்டவற்றுள்
நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு
முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
2. கணத்தாக்கு
கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் கால மாற்ற
வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
3. கீழ்கண்டவற்றுள்
நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
அ) ஒய்வுநிலையிலுள்ள
பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள
பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில்
மட்டும்
4. உந்த
மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும்
கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்குவிசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்றவீதம்
5. விசையின்
சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல்போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
6. புவி
ஈர்ப்பு முடுக்கம் g ன் அலகு ms-2 ஆகும்.
இது கீழ்க்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
அ) cms-1
ஆ) N Kg-1
இ) N m2 kg-1
ஈ) cm2 s-2
7. ஒரு
கிலோகிராம் எடை என்பது -------------------- ற்கு சமமாகும்.
அ) 9.8 டைன்
ஆ) 9.8 x 104 N
இ) 98 x 104 டைன்
ஈ) 980 டைன்
8. புவியில்
M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம்
கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
ஆ) 2M
இ)
M/4
ஈ) M
9. நிறை
மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50 % சுருங்கினால்
புவியில் பொருள்களின் எடையானது
அ)
50% குறையும்
ஆ)
50% அதிகரிக்கும்
இ)
25% குறையும்
ஈ)
300% அதிகரிக்கும்
10. ராக்கெட்
ஏவுதலில் -------------------- விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
அ) நியூட்டனின்
மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின்
பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர்
கோட்டு உந்த மாறாக் கோடுட்பாடு
ஈ) அ
மற்றும் இ
II. கோடிட்ட
இடங்களை நிரப்புக.
1. இடப்பெயர்ச்சி
நிகழ்வதற்கு விசை தேவை.
2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில்
திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி
சாய்கின்றனர். இந்நிகழ்வு இயக்கத்தில் நிலைமம் மூலம் விளக்கப்படுகிறது.
3. மரபுரீதியாக வலஞ்சுழி
திருப்புத்திறன் எதிர் குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் நேர் குறியிலும் குறிக்கப்படுகிறது.
4. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற பற்சக்கரங்கள் பயன்படுகிறது.
5. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் 980 N அளவாக இருக்கும்.