நியூட்டனின்
மூன்றாம் இயக்க விதி
ஒவ்வொரு
விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு
பொருள்கள் மீது செயல்படும்.
A என்ற பொருள் ஒன்று B
என்ற பொருளின் மீது FA விசையினை
செலுத்துகிறது எனில், 'B' ஆனது தன் எதிர்விசை FB யினை ‘A’ மீது செலுத்தும். இவற்றின் எண்மதிப்பு சமம்.
ஆனால் அவை ஒன்றுக்கொன்று எதிர்திசையில் செயல்படும்.
FA = - FB
சில எடுத்துக்காட்டுகள்
� பறவைகள்
தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது
அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர் விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
� நீச்சல்
வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை
ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே
தள்ளுகிறது.
� துப்பாக்கி
சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்த
பின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.