இயக்க விதிகள் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 1 : Laws of Motion
இயக்க விதிகள் (அறிவியல்)
நினைவில் கொள்க
· இயந்திரவியல் : விசையின் செயல்பாட்டால் பொருள் மீது
ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும் பாடம் இயந்திரவியல் ஆகும். இது இரண்டு பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. அவை நிலையியல் மற்றும் இயங்கியல் ஆகும்.
· இயங்கியல் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை
இயக்கவியல் மற்றும் இயக்கவிசையியல் ஆகும்.
· தன் மீது சமமற்ற புற விசை ஏதும் செயல்படாத வரை
பொருளானது தமது ஓய்வு நிலையிலோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க
நிலையிலோ, தொடர்ந்து இருக்கும். இப்பண்பினை நிலைமம்
என்றழைக்கிறோம். இது ஓய்வில் நிலைமம், இயக்கத்தில் நிலைமம்,
திசையில் நிலைமம் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது
· நகரும்
பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலனுக்கு சமமான அளவு உந்தம்
எனப்படும். இது விசையின் திசையிலேயே செயல்படும்.
· ஒரு
பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவைகளின் மொத்த விளைவை ஒரு தனித்த விசை மூலம்
அளவிடலாம். இது ‘தொகுபயன் விசை’
என்றழைக்கப்படுகிறது.
· இரட்டையின்
திருப்புத் திறன் மதிப்பு ஏதெனும் ஒரு விசையின் எண்மதிப்பு மற்றும் இணை
விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருகற்பலன் மதிப்பிற்கு சமமாகும்.
· திருப்புத்திறனின்
திசை, பொருட்களில் வலஞ்சுழியாக
இருப்பின் எதிர்குறியாகவும், இடஞ்சுழியாக இருப்பின்
நேர்குறியாகவும் கொள்ளப்படுவது மரபாகும்
· விசையின்
அலகு SI முறையில்
நியூட்டன் (N) மற்றும் CGS அலகு
முறையில் டைன் (dyne) ஆகும்.
· கணத்தாக்கு
மதிப்பானது (J) விசை (F) மற்றும் கால அளவின் (t) பெருக்கற் பலனுக்கு சமமாக இருக்கும். புவிஈர்ப்பு முடுக்கம் ஏன் மதிப்பு
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் துருவப் பகுதியில் அதிகமாகவும் இருக்கும்.
· ஒரு
பொருள் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை
என்றழைக்கப்படுகிறது. இதன் அலகு நியூட்டன் அல்லது கி கி விசை (kg f)
· புவிஈர்ப்பு
விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும். இந்த எடை
தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
· மேலிருந்து
கீழே வரும் பொருளின் முடுக்கம்,
புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ள போது எடை முற்றிலும்
குறைந்து சுழி நிலைக்கு வருகிறது. இது "எடையில்லா நிலை" என
அழைக்கப்படுகிறது.