ராக்கெட் ஏவுதல்
நிகழ்வு
ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின்
மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, இவை இரண்டும்
பயன்படுகின்றன. ராக்கெட்டுகளில் உந்து கலனில் (propellant tank) எரிபொருள்கள் (திரவ அல்லது திட) நிரப்பப்படுகின்றன. அவை
எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால்
பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன. அவை மிக அதிக உந்தத்தை
உருவாக்குகின்றன. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான
எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (combustion chamber) உருவாகி,
ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில்
உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது. உந்த அழிவின்மை
விதியின் படி நிறை குறைய குறைய ,
அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட
உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும்
வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது
விடுபடு வேகம் (escape speed) எனப்படுகிறது. (இப்பகுதியினை
பற்றி விரிவாக உயர் வகுப்பில் நீங்கள் கற்க உள்ளீர்கள்).