நிறை மற்றும்
எடை
நிறை :
நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும். பொருட்களின் நிறை என்பது அதில்
அடங்கியுள்ள பருப்பொருளின் அளவாகும். இதன் அலகு கிலோகிராம் ஆகும்.
எடை :
ஒரு பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை
என்றழைக்கப்படுகிறது.
எடை W = நிறை (m) × புவி
ஈர்ப்பு முடுக்கம் (g)
எடை ஓர் வெக்டார் அளவாகும். அது
எப்போதும் புவியின் மையத்தை நோக்கி செயல்படும். அதன் அலகு நியூட்டன் (N). எடையானது
புவிஈர்ப்பு முடுக்கத்தைச் சார்ந்தது. புவிஈர்ப்பு முடுக்க மதிப்பு புவியில்
இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு
இடம் மாறுபடும். பொருட்களின் எடை துருவப்பகுதியில் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாக இருக்கும்.
நிலவில் ஈர்ப்பு முடுக்கத்தின்
மதிப்பு 1.625 மீவி-2 ஆகும். இது புவியின், ஈர்ப்பு முடுக்கத்தில் 0.1654 மடங்கிற்கு சமமான அளவாகும். 60 கிகி நிறையுள்ள
ஒருவர் பூமியில் 588 N எடையுடன் (W = mg = 60 × 9.8 =
588N) நிலவில் 97.5N (W = mg = 60 × 1.625 = 97.5N) எடையுடன் இருப்பார். ஆனால் அவரது நிறை மதிப்பு (60 kg) புவியிலும் நிலவிலும் மாறாது இருக்கும்.