சுற்றுச்சூழல் பொருளியல் - காலநிலை மாற்றம் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
காலநிலை மாற்றம்
வளிமண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்களின் அளவுகள் வளர்ந்துகொண்டே செல்வதால் நீண்ட காலத்தில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளே காலநிலை மாற்றம் எனப்படும். தொழிற்புரட்சியில் தொடங்கி மனித நடவடிக்கைகளால் வழி மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு தொழில்புரட்சிக்கு முன் 280 ppm என்ற அளவிலிருந்து 2016ம் ஆண்டு 402 ppm ஆக, அதாவது 40 விழுக்காடு அளவிற்கு புவி வெப்பத்தை அதிகரித்துள்ளது.
கடற்கரை நீரின் வெப்ப அதிகரிப்பு, உயர்ந்த வெப்பநிலை, மழைபெய்யும் காலங்களில் மாற்றம், அதிக வேகத்துடன் அடிக்கடி தோன்றும் புயல் ஆகியவற்றை உலகின் பல பகுதிகளிலும் உணரத் தொடங்கியுள்ளார்கள். கடல் மட்டமும் வெப்பமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.