சுற்றுச்சூழல் பொருளியல் - E- கழிவுகள் (E – Waste) | 12th Economics : Chapter 10 : Environmental Economics
E- கழிவுகள் (E – Waste)
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் E - கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள் (Air conditioners), கைபேசிகள், கணினிகள் போன்ற பெருமளவில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னனுச் சாதனங்களை உள்ளடக்கியதாகும்.
தொலைசாதனம், கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, VCR, DVD, தொலைநகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை கழிக்கும் போதோ அல்லது மறுசுழற்சி செய்யும்போதோ E கழிவுகள் தோன்றும்.
திடக்கழிவுகள் (Solid Waste)
மனித நடவடிக்கைகளில் பயனில்லாத தேவையற்ற பொருட்களைக் கழிப்பதே திடக் கழிவுகள் ஆகும். அவை திடப் பொருட்களாகவோ, பகுதி திடப்பொருட்களாகவோ அல்லது திரவமாகவோ இருக்கும். வீட்டுக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், இறந்த பிராணிகள், கட்டுமானத்துறைக் கழிவுகள், சாம்பல், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் திடக் கழிவின் வகைகளாகும். இக்குப்பைகள் தெருக்களிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் சரியான நேரங்களில் அப்புறப்படுத்தாமல் இருந்தால் கடுமையான சுத்த சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும்.