பொருளாதாரம் - சுற்றுச்சூழல் பொருளியல் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
சுற்றுச்சூழல் பொருளியல்
"சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்மையாகவே சமுதாயப் பிரச்சனைகள்..... அவைகளின் துவக்கத்திற்கு மக்களே காரணமாகவும் முடிவில் பாதிக்கப்படுவதும் மக்களே
- சர் எட்மண்டு ஹிலரி.
புரிதலின் நோக்கங்கள்
1. பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் எவ்வாறு ஒன்றொருக்கொன்று தொடர்புள்ளவை என்பதை அறிவது,
2. பல்வகை சுற்றுச்சூழல் மாசுகளையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்வது, மற்றும்
3. நீடித்த நிலைத்த வளர்ச்சி என்ற கருத்தினை அறிந்து கொள்வது.
அறிமுகம்
சுற்றுச்சூழல் பொருளியல் என்பது மனிதனின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இயற்கைச்சூழலுக்கும் இடையோன தொடர்பினைபற்றி படிக்கும் ஒரு இயல் ஆகும். இயற்கை வளங்களை உயர்திறனுடன் பங்கீடு செய்வது தொடர்பான பொருளியலின் ஒரு பகுதியே சுற்றுச்சூழல் பொருளியல் பொருளாதார நடடிக்கைகளுக்கான நேரடி மதிப்பினையும், இடுபொருட்களையும் சுற்றுச்சூழல் வழங்குவதால் அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகும்.
இயற்கை வள மதிப்பீடு, பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, கழிவுகள் மேலாண்மை மற்றும் மறுசுழற்ச்சி, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றினை உள்ளடக்கியது சுற்றுச்சூழல் பொருளியல். எந்த வகையான வளங்களாக இருந்தாலும் அவைகள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தினால்தான் அவற்றிலிருந்து கிடைக்கும் பயன் சிறந்ததாக இருக்கும். அவ்வகையில், இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்களைப் பெறுவதைபற்றி அறியும் ஒரு இயலாகும்.
சுற்றுச்சூழல் பொருளியலின் முக்கிய குறிக்கோள் இயற்கை வளங்களை மிகச்சிறந்த முறையில் பங்கீடு செய்வற்கான கருவிகளையும், கொள்கைகளையும் கண்டறிந்து அவ்வளங்களை நோக்கி சந்தையினை திரும்ப வைப்பது ஆகும்.