பொருளாதாரம் - சுற்றுச் சூழல் பொருளாதாரம் என்பதன் பொருள் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
சுற்றுச்சூழல் என்பதன் பொருள்
சுற்றியிருப்பவைகள் என்ற பொருள்படும் "Environia" எனும் பிரஞ்ச் சொல்லிருந்து தோன்றியது சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் என்பது, நம்மை சுற்றியுள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு ஆகியவைகளை குறிப்பிடுவது ஆகும். மேலும் இது, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகளை உள்ளடக்கிய உயிர்தொகுப்பு அல்லது உயிர்சூழல் சமூக அமைப்பினை தீர்மானிப்பதும், உயிர்வாழ்வதும் ஆகும்.
சுற்றுச் சூழல் பொருளாதாரம் என்பதன் பொருள்
சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்புகளின் அடிப்படையில் தேர்வு செய்வதால் இது பொருளியியலில் வேறுபட்ட பிரிவாகும். செலவுகள் மற்றும் நன்மைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகளையும் சுற்றுச் சூழலையும் சமன்செய்வதே இதன் நோக்கமாகும்.
சுருங்கக் கூறினால் சுற்றுப்புறச் சூழலின் பிரச்சனைகள் மற்றும் கொள்கைகளின் நிதித்தாக்கத்தைப் பற்றி ஆராயும் பொருளியலின் ஒரு பகுதியே சுற்றுச்சூழல் பொருளாதாரம் எனப்படும்.