Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு

சுற்றுச்சூழல் பொருளியல் - பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு | 12th Economics : Chapter 10 : Environmental Economics

   Posted On :  16.03.2022 11:27 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்

பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு

மனிதன் தனது வாழ்வாதாரத்திற்காக இயற்கையிலுள்ள மற்ற உயிரினங்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் இணைந்துள்ளதால், அவனது வாழ்க்கை முறையை சுற்றுச்சூழலே பெருமளவுக்கு தீர்மானிக்கிறது.

பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு

சமூக, அரசியல், அறவியல், தத்துவ மற்றும் பொருளாதார அமைப்பு முறைகள் மனித வாழ்வினை தீர்மானிக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். மனிதன் தனது வாழ்வாதாரத்திற்காக இயற்கையிலுள்ள மற்ற உயிரினங்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் இணைந்துள்ளதால், அவனது வாழ்க்கை முறையை சுற்றுச்சூழலே பெருமளவுக்கு தீர்மானிக்கிறது. பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் R.V. அய்யர்ஸ் "பொருள்சார் சமநிலை அணுகுமுறை" (Material Balance Approach) வகுத்தளித்துள்ளனர்.



இந்த மாதிரியில் மொத்த பொருளியியல் செயல்பாடுகள் உள்ளீடு , வெளியீடு ஆகியவற்றிற்கிடையே சமமான ஓட்டமாக உள்ளது என்று கருதப்பட்டுள்ளது. உள்ளீடுகளில் உள்ள திறன் சுற்றுப்புறச் சூழலிலிருந்து பெறப்படுகின்றது. பொருளாதாரத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் உள்ள தொடர்பு வரைபடங்கள் மூலம் விளக்கப்படுகின்றது. 

சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான இணைப்பினை நாம் அறிவியல் விதிகொண்டு விளங்கிக்கொள்ளலாம். "உற்பத்தி முறைக்குள் உள்நுழையும் எந்தவொன்றும் பிறகு வெளியேறித்தான் ஆகவேண்டும்" (What goes in must come out) TİTUG 6006UT வலியுறுத்துகிறது இயற்பியலின் பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்ப இயக்கவியல் முதல்விதி (First law of Thermodyanmics). இவ்விதியை ஆதாரமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குவதுதான் மேற்சொன்ன பொருள்சார் சமநிலை அணுகுமுறையாகும். சுழல் விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போல் அனைத்து விதமான உற்பத்திக்கும் ஆதாரம் இயற்கையே ஆகும். இயற்கை சூழலிருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்கள் உள்வருவதும், அவைகள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்ச்சித் துறைக்கு செல்வதும், உற்பத்தி மற்றும் நுகர்ச்சித்துறையின் கழிவுகள் மறுசுழற்ச்சி செய்யப்பப்பட்டு மீளவும் பொருட்களாக்கப்படுவதும் நடக்கின்றன. நுகர்ச்சியிலிருந்தும், உற்பத்தியிலிருந்தும் வெளியேறும் இறுதிக்கழிவுகள் இயற்கை சூழலிலேயே கலக்கவிடப்டுகின்றன. ஆனால், முழுமையான மறுசுழற்ச்சியும் முறையற்ற இறுதிக்கழிவுகள் வெளியேற்றமும் இயற்கை சூழலை பொழுதும் பாதிக்கும். மீண்டும் அங்கிருந்து உற்பத்திக்காக நாம் எடுக்கும் மூலப்பொருட்களின் தரம் குறையும், உற்பத்தி செலவு அதிகரிக்கவும் வழிவகுக்கும்.


இது சரியா? சுற்றுச் சூழல் சுழற்சி செய்யக் கூடிய, சுழற்சி செய்யமுடியாத வளங்களை வழங்கினாலும் கழிவுகளைக் கொட்டக்கூடிய இடமாகவும் உள்ளது. நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருந்தாலும் வளங்களுக்காக இயற்கையைச் சார்ந்திருப்பதால் சுற்றுச்சூழலுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் தங்கள் கழிவுகளை இயற்கையில் கொட்டுகின்றனர். இயற்கைக்கு எல்லாக் கழிவுகளையும் செரிக்கும் தன்மை இருந்தாலும் இத்தன்மை வரையறைக்குட்பட்டது. எதற்கும் ஒரு அளவு உள்ளது. உலகத்தின் கழிவு தாங்கும் சக்தி முழுஅளவிற்கு மேல் உள்ளதால் அதனால் நிறைய வகைக் கழிவுகளை சுத்திகரிக்க முடியவில்லை . உலகமும் ஒருநாள் ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.





Tags : Environmental Economics சுற்றுச்சூழல் பொருளியல்.
12th Economics : Chapter 10 : Environmental Economics : Linkage between Economy and Environment Environmental Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல் : பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு - சுற்றுச்சூழல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்