வினவல் அமைப்பு மொழி - SQL-ன் கூறுகள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

   Posted On :  18.12.2022 04:54 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

SQL-ன் கூறுகள்

QL- கட்டளைகள் ஐந்து பொதுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

SQL-ன் கூறுகள்

SQL- கட்டளைகள் ஐந்து பொதுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:


1. தரவு வரையறை மொழி

தரவு வரையறை மொழி (DDL) தரவுத்தள அமைப்பு அல்லது திட்ட வடிவமைப்பினை வரையறுக்கும் SQL கூற்றுகளை கொண்டிருக்கும். இது தரவுத்தள திட்ட வடிவமைப்பின் விளக்கங்களுடன் செயல்படுகிறது. மேலும், தரவுத்தளங்களில் உள்ள தரவுத்தள உறுப்புகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் பயன்படுகிறது.

DDL தரவுத்தள அமைப்பு சேமிப்பு வடிவமைப்பையும், அணுகல் முறைகளையும் குறிப்பிடப் பயன்படும் வரையறைகளை வழங்குகிறது.

ஒரு DDL கீழ்க்காணும் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது:

1. தரவு உருப்படி, பிரிவு, பதிவு மற்றும் தரவுத்தள கோப்பு போன்ற தரவு பிரிவு வகைகளை அடையாளம் காண வேண்டும்.

2. ஒவ்வொரு தரவு உருப்படி, பதிவு, கோப்பு மற்றும் தரவுத்தள வகைகளுக்கு ஒரு தனித்தன்மையான பெயரை கொடுக்கிறது.

3. இது சரியான தரவு வகையை குறிப்பிட வேண்டும்.

4. இது தரவு உருப்படியின் அளவை வரையறுக்க வேண்டும்.

5. ஒரு தரவு உருப்படி பயன்படுத்தக்கூடிய மதிப்புகளின் வரம்பை இது வரையறுக்கலாம்.

6.அங்கீகரிக்கப்படாத தரவு பதிவுகளை தடுப்பதற்கான தனியுரிமையை குறிப்பிடலாம்.

தரவு வரையறை மொழியின் கீழ்வரும் SQL கட்டளைகள் பின்வருமாறு:

CREATE : தரவுத்தளத்தில் அட்டவணைகளை உருவாக்க

ALTER  : தரவுத்தளத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க

DROP  :  தரவுத்தளத்தில் உள்ள அட்டவணைகளை நீக்க

TRUNCATE : ஒரு அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழிக்கும். மேலும், அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்.


2. தரவு கையாளுதல் மொழி

தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு கணிப்பொறி நிரலாக்கு மொழியாகும். SQL-ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்த அட்டவணையில் சேமித்துவைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்று கூற்றுகளை கொண்டிருக்கும்.

தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர், DML ல் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்.

தரவுகளை கையாளுதல் என்பது,

• தரவுத்தளத்தில் புதிய தகவலை சேர்த்தல்.

• தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை திரும்ப பெறுதல்.

• தரவுத்தளத்திலிருந்து வேண்டாத தகவல்களை நீக்குதல்.

• தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றி அமைத்தல்.

DML (தரவு கையாளுதல் மொழி) அடிப்படையில் இரண்டு வகைப்படும்:

செயல்முறையுடனான DML - தேவைப்படும் தரவையும், அதனை பெறும் வழிமுறையும் பயனரால் குறிப்பிடப்பட வேண்டும்.

செயல்முறை அல்லாத DML - பயனர் தேவைப்படும் தரவை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது அதனை பெற தேவையான வழி முறையை குறிப்பிடத் தேவையில்லை.

SQL-லில் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகள்:

INSERT : ஒரு அட்டவணையில் தரவுகளை நுழைத்தல்.

UPDATE : அட்டவணையில் ஏற்கனவே உள்ள தரவுகளை புதுப்பித்தல்.

DELETE : அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கும். ஆனால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நினைவக பகுதியை விடுவிக்காது.


3. தரவு கட்டுப்பாட்டு மொழி

ஒரு தரவு கட்டுப்பாடு மொழி என்பது தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் அணுகுதலை கட்டுப்படுத்தும் ஒரு நிரலாக்க மொழியாகும். இது தரவுத்தளத்தை அணுகுவதற்கான சிறப்புரிமையை கட்டுப்படுத்துகிறது (அங்கீகாரம்). இத்தகைய சிறப்புரிமைகள் வரிசைத்தொடர்களை உருவாக்கல், அட்டவணைகளை பார்வையிடுதல் போன்ற அனைத்து தரவுத்தள செயல்பாடுகளை செயல்படுத்துவதைக் குறிக்கும்.

SQL-லில் உள்ள தரவு கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:

GRANT : ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுமதி வழங்கும்.

REVOKE : Grant கட்டளையினால் தரப்பட்டட அணுகல் அனுமதி திரும்பப் பெறப்படும்.


4. பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி

தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை (TCL) நிர்வகிக்க பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி பயன்படுகிறது. DML கூற்றுகளின் மூலம் அட்டவணையில் உள்ள தரவுகளுக்கு செய்யப்படும் மாற்றங்களை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.

SQL - லில் உள்ள பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள் :

Commit : தரவுத்தள பரிவர்த்தனையை நிரந்தரமாக சேமிகும்.

Roll back : ஒரு தரவுத்தளத்தை முந்தைய commit நிலைவரை மீட்டெடுக்கும்.

Save point Rollback : செய்வதற்கு ஏதுவாக தரவுத்தள பரிவர்த்தனையை தற்காலிமாக சேமிக்கும்.


5. தரவு வினவல் மொழி

தரவு வினவல் மொழி ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை வினவுதலுக்கும், மீட்டெடுப்பதற்கான கட்டளைகளை கொண்டுள்ளது. தரவு வினவல் மொழியில் உள்ள அத்தகைய ஒரு SQL கட்டளை SELECT ஆகும்.

Select : அட்டவணையிலுள்ள பதிவுகளை வெளிக்காட்டும்.

Tags : Structured Query Language(SQL) வினவல் அமைப்பு மொழி.
12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL) : Components of SQL Structured Query Language(SQL) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி : SQL-ன் கூறுகள் - வினவல் அமைப்பு மொழி : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி