Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | SQL-ன் செயலாக்க திறன்கள்

வினவல் அமைப்பு மொழி - SQL-ன் செயலாக்க திறன்கள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

   Posted On :  17.08.2022 07:48 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

SQL-ன் செயலாக்க திறன்கள்

SQLன் பல்வேறு செயலாக்க திறன்கள்

SQL-ன் செயலாக்க திறன்கள்

SQLன் பல்வேறு செயலாக்க திறன்கள்:

1. தரவு வரையறை மொழி (DDL-Data Definiton Language): SQL DDL-அட்டவணைகளை (Relational) உறவுநிலை திட்டங்களை (கட்டமைப்பு) வரையறுத்தல், நீக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் குறிப்புகளை உருவாக்கத்திற்கு தேவையான கட்டளைகளை வழங்கும் ஒரு வரையறை மொழியாகும்.

2. தரவை கையாளுதல் மொழி (DML-DataManipulationLanguage): SQLDML தரவுத்தளங்களில் வரிசைகளை (tuples)-ஐ சேர்க்கவும், நீக்கவும், மாற்றவும் கட்டளைகளை உள்ளடக்கியது.

3. உட்பொதிக்கப்பட்ட தரவுக் கையாளுதல் மொழி (EDML-Embedded Data Manipulation Language): SQLன் உட்பொதிந்த வடிவம், உயர்நிலை நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

4. View வரையறை: SQL அட்டவணையை பார்வையிடுவதற்கான View கட்டளைகளைக் கொண்டுள்ளது.

5. அங்கீகாரம்: SQL உறவுநிலைக்கான அணுகல் உரிமைகளுக்கான கட்டளைகளையும், அட்டவணைகளை பார்வையிடுதலுக்கான கட்டளைகளையும் கொண்டுள்ளது.

6. ஒருமைப்பாடு: SQL நிபந்தனையை பயன்படுத்தி ஒருமைப்பாட்டை சரிபார்த்தலுக்கு படிவங்களை வழங்குகிறது.

7. பரிவர்த்தனை கட்டுப்பாடு: கோப்பு பரிமாற்றங்களுக்கான கட்டளைகள் மற்றும் பரிவர்த்தனை செயலாக்கத்தின் கட்டுப்பாட்டையும் SQL கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா

SQL(Structured Query Language)-வினவல் அமைப்பு மொழி தரவுத்தளங்களை அணுகுதலுக்கான மொழி எனில், MySQL என்பது SQL Server, Oracle, Informix, Postgres, etc. போன்று  ஒரு தரவுதள மேலாண்மை அமைப்பாகும். MySQL ஒரு உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு (RDBMS). 

Tags : Structured Query Language(SQL) வினவல் அமைப்பு மொழி.
12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL) : Processing Skills of SQL Structured Query Language(SQL) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி : SQL-ன் செயலாக்க திறன்கள் - வினவல் அமைப்பு மொழி : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி