வினவல் அமைப்பு மொழி - ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)
ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல்
1. ஒரு தரவுத்தளத்தை உருவாக்க, பின்வரும் கட்டளையை தூண்டுகுறியில் உள்ளிடவும்: CREATE DATABASE database_name; தரவுத்தளத்தின் பெயர்
(எடுத்துக்காட்டாக) அட்டவணைகளை சேமித்து வைக்க ஒரு தரவுத்தளத்தை
உருவாக்க : CREATE DATABASE stud;
2. தரவுத்தளத்துடன் செயலாற்ற, பின்வரும் கட்டளையை உள்ளிடவும். USEDATABASE;
எடுத்துக்காட்டாக, உருவாக்கப்பட்ட stud என்ற தரவுத்தளத்தை பயன்படுத்த கொடுக்க வேண்டிய கட்டளை USE stud;
உங்களுக்குத் தெரியுமா
WAMP என்பதன் விரிவாக்கம் “Windows, Apache, MySQL மற்றும் PHP”. WAMP எனப்படும் சொல்லானது விண்டோஸ், அப்பாச்சி, MySQL, PHP என்ற சொற்களின் முதல் எழுத்துக்களை எடுத்து உருவாக்கப்பட்ட சுருக்கப் பெயர் ஆகும். இணைய வளர்ச்சிக்கும், உட்புற சோதனைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இணையதள நேரலை சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.