வினவல் அமைப்பு மொழி - TCL commands | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)
1. COMMIT command
COMMIT கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக சேமிக்கப்பயன்படுகிறது. INSERT, UPDATE, DELETE போன்ற DML கட்டளைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் நிரந்தரமல்ல. SQL தூண்டுகுறியில் COMMIT கட்டளையை கொடுத்த பிறகுதான், இது நிரந்தரமாக குறிக்கப்படுகிறது. COMMIT கட்டளையை கொடுத்து விட்டால், செய்யப்பட்ட மாற்றங்கள் திரும்பப் பெற இயலாது. COMMIT கட்டளை இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
COMMIT;
2. ROLLBACK கட்டளை
ROLLBACK கட்டளை கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்ப பெறும். இந்த கட்டளையுடன் SAVEPOINT கட்டளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட savepoint இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ROLL BACK TO savepoint name;
3. SAVEPOINT கட்டளை
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி, மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்.
SAVEPOINT savepoint_name;
பின்வரும் தரவைக் கொண்ட மாணவர் அட்டவணையில் COMMIT, SAVEPOINT மற்றும் ROLLBACK கட்டளைகளை காண்பிக்கும் எடுத்துக்காட்டு :