வினவல் அமைப்பு மொழி - வினவல் அமைப்பு மொழி: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)
கணினி அறிவியல் : வினவல் அமைப்பு மொழி
மதிப்பீடு
பகுதி - அ
சரியான விடையை தேர்ந்தெடுத்து
எழுதுக. (1 மதிப்பெண்)
1. எந்த கட்டளைகள் அட்டவணை வடிவமைப்பை
உருவாக்குதல், உறவுநிலையை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற
செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?
அ)
DDL
ஆ)
DML
இ)
DCL
ஈ)
DQL
விடை : அ) DDL
2. எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை
மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
அ)
SELECT
ஆ)
ORDER BY
இ)
MODIFY
ஈ)
ALTER
விடை : ஈ)
ALTER
3. அட்டவணையை நீக்க பயன்படுத்த
வேண்டிய கட்டளை
அ)
DROP
ஆ)
DELETE
இ)
DELETE ALL
ஈ)
ALTER TABLE
விடை : அ) DROP
4. வினவல்களை உருவாக்க பயன்படுவது
அ)
SELECT
ஆ)
ORDER BY
இ)
MODIFY
ஈ)
ALTER
விடை : அ)
SELECT
5. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை
வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause
அ)
SORT BY
ஆ)
ORDER BY
இ)
- GROUP BY
ஈ)
SELECT
விடை : ஆ)
ORDER BY
பகுதி - ஆ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (2 மதிப்பெண்கள்)
1. 18 வயதிற்கும் குறைவாக உள்ள
அனைத்து மாணவர்களின் தரவினை வரிசைப்படி தெரிவு செய்யும் ஒரு வினவலை எழுதுக.
விடை. SELECT ALL age FROM STUDENT WHERE age<18;
2. Unique மற்றும் Primary
Key கட்டுபாடுகளை வேறுபடுத்துக.
விடை. Unique கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும்
ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. உதாரணத்திற்கு, student அட்டவணையில்
Admno என்ற புலத்திற்கு UNIQUE கட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஒரே சேர்க்கை எண் இரு மாணவர்களுக்கு
தரப்படாததை உறுதி செய்து கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டை கீழ்க்கண்டவாறு பயன்படுத்திக்
கொள்ளலாம்: UNIQUE கட்டுப்பாட்டை NOT NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே
பயன்படுத்த முடியும்.
3. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும்,
நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக?
விடை. நெடுவரிசை கட்டுப்பாடு: தனிப்பட்ட நெடுவரிசைக்கு மட்டுமே நெடுவரிசை
கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். அட்டவணை கட்டுப்பாடு: அட்டவணை கட்டுப்பாடு ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளுக்கு பயன்படுத்த முடியும்.
4. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும்,
அவற்றில் மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?
விடை. SQLன் பல்வேறு கூறுகளானவை தரவு வரையறை மொழி (DDL), தரவு கையாளுதல்
மொழி (DML), தரவு வினவல் மொழி (DQL). பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மொழி (TCL), தரவு
கட்டுப்பாட்டு மொழி (DCL).
5. SQL மற்றும் MySQLக்கு உள்ள
வேறுபாடுகள் யாவை?
விடை. SQL என்பது உறவுநிலைத் தரவுத்தளங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும்
உதவும் மொழியாகும்.
MySQL என்பது ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும்.
பகுதி - இ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (3 மதிப்பெண்கள்)
1. கட்டுப்பாடு என்றால் என்ன?
Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை. இது தரவுத்தளத்திலுள்ள தரவுகளின் துல்லியத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை
உறுதி செய்கிறது. கட்டுப்பாடுகள் நெடுவரிசை அல்லது அட்டவணை அளவிலானதாக இருக்கக்கூடும்.
குறிப்பு: கட்டுப்பாடுகள் என்பது ஒரு புலம் அல்லது புலங்களின் தகுதிக்கு
பயன்படுத்தக்கூடிய நிபந்தனையை குறிக்கும்.
(i) Primary Key கட்டுப்பாடு :
தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை
primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும்.
(ii) இது unique கட்டுப்பாட்டினை போன்றே காணப்பட்டாலும் அட்டவணையின்
ஒரு புலத்தை மட்டுமே primary key ஆக குறிப்பிட முடியும்.
(iii) primary key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது
என்பதால், primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்கப்படும். புலம், NOT NULL என்ற
கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும்.
2. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன்
மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SDL கூற்றை எழுதுக.
விடை. ALTER கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணை வடிவமைப்பில் நெடுவரிசையை சேர்த்தல்,
ஏற்கனவே இருக்கும் புலத்திற்கு மறு பெயரிடல், எந்த ஒரு நெடுவரிசையின் தரவுவகையையோ அல்லது
அளவினையோ மாற்றி அமைத்தல் நெடுவரிசையை அட்டவணையிலிருந்து நீக்குதல் போன்ற மாற்றங்களை
செய்யலாம். அது கீழ்க்காணும் முறையில் பயன்படுத்தப்படுகிறது:
ALTER TABLE <table-name> ADD <columnname>
<data type><size>;
3. ஏதேனும் மூன்று DDL கட்டளைகளை
எழுதுக.
விடை. DELETE, TRUNCATE AND DROP கூற்று:
DELETE : ALL.60T WHERE clause-60 கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனையின்
அடிப்படையில், அட்டவணையின் குறிப்பிட்ட வரிசைகளை மட்டும் நீக்கும் அல்லது எந்த வித
நிபந்தனையும் கொடுக்கப்படவில்லையெனில், அட்டவணையின் அனைத்து வரிசைகளையும் நீக்கிவிடும்.
ஆனால் அட்டவணைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை விடுவிக்காது.
TRUNCATE: TRUNCATE கட்டளை அட்டவணையின் அனைத்து வரிசைகளையும் நீக்கி,
வடிவமைப்பை மாற்றாமல், அட்டவணைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை விடுவிக்கும்.
DROP : DROP கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு உறுப்பை நீக்கபயன்படுகிறது.
ஒரு அட்டவணையை DROP செய்தால், அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டு, அட்டவணையின்
வடிவமைப்பு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். ஒரு அட்டவணையை DROP செய்துவிட்ட பின்பு,
அதனை திரும்பப் பெற இயலாது.
4. Savepoint கட்டளையின் பயன்பாட்டை
ஒரு எடுத்துக்காட்டுடன் எழுதுக.
விடை. UPDATE Student SET Name = 'Mini' WHERE
Admno=105;
SAVEPOINT A;
INSERT INTO Student VALUES(106, 'Jisha', 'F', 19, 'Delhi');
SAVEPOINT B;
5. DISTINCT சிறப்புச் சொல்லை
பயன்படுத்தி ஒரு SQL கூற்றினை எழுதுக.
விடை. DISTINCT சிறப்புச் சொல்லுடன் SELECT கட்டளையைப் பயன்படுத்தி ஒரு அட்டவணையில்
இரட்டிப்பு வரிசைகளை உருவாகாமல் தடுக்கலாம். இது தரவு இரட்டித்தலைத் தவிர்க்கின்றது.
உதாரணத்திற்கு, SELECT * DISTINCT place FROM student;
பகுதி-ஈ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (5 மதிப்பெண்கள்)
1. பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும்,
அதன் செயல்பாடுகளையும் எழுதுக.
விடை. கட்டுப்பாடுகளின் வகைகள்:
கட்டுப்பாடுகள் தரவுத்தள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதால், அவற்றை தரவுத்தள
ஒருங்கிணைப்பு கட்டுப்பாடுகள் எனவும் அழைக்கலாம். கட்டுப்பாடுகள் பலவகைப்படும். அவை
Unique கட்டுப்பாடு :
இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும் ஒரே
மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. உதாரணத்திற்கு, student அட்டவணையில்
Admno என்ற புலத்திற்கு UNIQUE கட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஒரே சேர்க்கை எண் இரு மாணவர்களுக்கு
தரப்படாததை உறுதி செய்து கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டை கீழ்க்கண்டவாறு பயன்படுத்திக்
கொள்ளலாம்:
CREATE TABLE Student
(,
Admno integer NOT NULL UNIQUE, →
Unique constraint
Name char (20) NOT NULL,
Gender char (1),
Age integer,
Place char (10),
);
UNIQUE கட்டுப்பாட்டை NOT NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே
பயன்படுத்த முடியும். ஒரு தனிப்பட்ட புலத்திற்கு இரு கட்டுப்பாடுகளை பயன்படுத்தினால்
அப்புலம் பல கட்டுப்பாடுகளைக் கொண்ட புலம் என அழைக்கலாம். மேற்கண்ட கட்டளை அமைப்பில்,
NOT NULL மற்றும் UNIQUE எனும் பல கட்டுப்பாடுகள் Admno என்ற ஒரு தனித்த புலத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
Primary Key கட்டுப்பாடு :
தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை
primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும். இது unique கட்டுப்பாட்டினை
போன்றே காணப்பட்டாலும் அட்டவணையின் ஒரு புலத்தை மட்டுமே primary key ஆக குறிப்பிட முடியும்.
primary key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது என்பதால், primary
key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்கப்படும் புலம், NOT NULL என்ற கட்டுப்பாட்டையும்
கொண்டிருக்க வேண்டும்.
மாணவர் அட்டவணையில் primary key கட்டுப்பாட்டை பயன்படுத்துதலை விளக்கும்
எடுத்துக்காட்டு:
CREATE TABLE Student
(
Admno integer NOT NULL PRIMARY KEY,
→ Primary Key
constraint
Name char(20) NOT NULL,
Gender char(1),
Age integer,
Place char(10),
);
மேற்கண்ட எடுத்துக்காட்டில், Admno என்ற புலம் primary key என்று வரையறுக்கப்பட்டுள்ளதால்,
ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட முடிகிறது. மேலும் NOT NULL என்றும் வரையறுக்கப்பட்டுள்ளதால்,
இந்த புலத்தின் மதிப்பு காலியாக இருக்கக் கூடாது.
DEFAULT கட்டுப்பாடு:
DEFAULT கட்டுப்பாடு ஒரு புலத்தில் முன்னியல்பு மதிப்புகளை இருத்தி
வைக்க பயன்படுகிறது. DEFAULT கட்டுப்பாட்டை கொண்ட குறிப்பிட்ட புலத்திற்கு மதிப்பு
கொடுக்காவிடில், தானாகவே முன்னியல்பு மதிப்பு அந்த புலத்தில் இருத்தப்பட்டுவிடும்.
மாணவர் அட்டவணையில் Default கட்டுப்பாடு பயன்படுத்துதலை விளக்கும்.
2. கீழ்காணும் பணியாளர் அட்டவணையை
கருத்தில் கொண்டு, (i) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு SQL கட்டளைகளை எழுதுக.
(i) அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பெறும் சம்பளங்களின் இறங்கு
வரிசையில் காண்பிக்க.
(ii) 5000 முதல் 7000 வரை ALLOWANCE பெறும் அனைத்து பணியாளர்களின் விவரங்களை
காண்பிக்க.
(iii) Mechanic வகையை சார்ந்த பணியாளர்களை நீக்க.
(iv) ஒரு புதிய வரிசையை உருவாக்க.
(v) Operators வகையை சார்ந்த அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.
விடை. (i) SELECT* FROM employee ORDER BY PAY DESC;
(ii) SELECT * FROM employee WHERE ALLOWANCE BETWEEN 5000 AND 7000
(iii) DELETE FROM employee WHERE DESIG = "Mechanic";
(iv) INSERT FROM employee VALUES ('C1005', 'Abhi', 'Mechanic',
15000,
6500);
(v) SELECT * FROM employee WHERE DESIG = 'Operator'
3. SQL ன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும்
கட்டளைகளை எழுதுக.
விடை. SQL- கட்டளைகள் ஐந்து. பொதுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
(i) DML - தரவு கையாளுதல் மொழி
(ii) DDL - தரவு வரையறை மொழி
(iii) DCL - தரவு கட்டுப்பாட்டு மொழி
(iv) TCL - பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி
(v) DQL - தரவு வினவல் மொழி
தரவு வரையறை மொழி :
தரவுவரையறைமொழி(DDL) தரவுத்தள அமைப்பு அல்லது திட்ட வடிவமைப்பினை வரையறுக்கும்
SQL கூற்றுகளை கொண்டிருக்கும். இது தரவுத்தள திட்ட வடிவமைப்பின் விளக்கங்களுடன் செயல்படுகிறது.
மேலும், தரவுத்தளங்களில் உள்ள தரவுத்தள உறுப்புகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கும்,
மாற்றியமைப்பதற்கும் பயன்படுகிறது.
தரவு வரையறை மொழியின் கீழ்வரும் SQL கட்டளைகள் பின்வருமாறு:
CREATE தரவுத்தளத்தில் அட்டவணைகளை உருவாக்க.
ALTER தரவுத்தளத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க.
DROP தரவுத்தளத்தில் உள்ள உட்டவணைகளை நீக்க.
TRUNCATE ஒரு அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழிக்கும். மேலும்,
அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்.
தரவு கையாளுதல் மொழி:
தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை
சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு கணிப்பொறி நிரலாக்கு
மொழியாகும். SQL-ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்தள அட்டவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள
தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்று கூற்றுகளை கொண்டிருக்கும்.
தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர் ,
DML ல் குறிப்பிட்டுள்ள செயல் முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்.
SQL-லில் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகள்:
INSERT ஒரு அட்டவணையில் தரவுகளை நுழைத்தல்.
UPDATE அட்டவணையில் ஏற்கனவே உள்ள தரவுகளை புதுப்பித்தல்.
DELETE அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கும். ஆனால் அவற்றிற்கு
ஒதுக்கப்பட்ட நினைவக பகுதியை விடுவிக்காது.
தரவு கட்டுப்பாட்டு மொழி ;
ஒரு தரவு கட்டுப்பாடு மொழி என்பது தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள
தரவுகளின் அணுகுதலை கட்டுப்படுத்தும் ஒரு நிரலாக்க மொழியாகும். இது தரவுத்தளத்தை அணுகுவதற்கான
சிறப்புரிமையை கட்டுப்படுத்துகிறது (அங்கீகாரம்). இத்தகைய சிறப்புரிமைகள் வரிசைத்தொடர்களை
உருவாக்கல், அட்டவணைகளை பார்வையிடுதல் போன்ற அனைத்து தரவுத்தள செயல்பாடுகளை செயல்படுத்துவதைக்
குறிக்கும்.
SQL-லில் உள்ள தரவு கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:
GRANT ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு
அனுமதி வழங்கும்.
REVOKE Grant கட்டளையினால் தரப்பட்டட அணுகல் அனுமதி திரும்பப் பெறப்படும்.
SQL -லில் உள்ள பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:
Commit தரவுத்தள பரிவர்த்தனையை நிரந்தரமாக சேமிக்கும்.
Roll back ஒரு தரவுத்தளத்தை முந்தைய commit நிலைவரை மீட்டெடுக்கும்.
Save point Rollback செய்வதற்கு ஏதுவாக தரவுத்தள பரிவர்த்தனையை தற்காலிகமாக
சேமிக்கும்.
தரவு வினவல் மொழி :
தரவு வினவல் மொழி ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை வினவுதலுக்கும்,
மீட்டெடுப்பதற்கான கட்டளைகளை கொண்டுள்ளது. தரவு வினவல் மொழியில் உள்ள அத்தகைய ஒரு
SQL கட்டளை SELECT ஆகும்.
Select : அட்டவணையிலுள்ள பதிவுகளை வெளிக்காட்டும்.
4. மாணவர் அட்டவணையில் பின்வரும்
SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
(i) SELECT கூற்று GROU BY
clause பயன்படுத்தி
(ii) SELECT கூற்று ORDER BY
clause பயன்படுத்தி
விடை:
ORDER BY clause
SQL-ன் ORDER BY clause பயன்படுத்தி தரவுகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
நெடுவரிசைகளின் அடிப்படையில் ஏறுவரிசையிலோ அல்லது இறங்குவரிசையிலோ வரிசைப் படுத்தலாம்.
1. கொடாநிலையாக, ORDER BY தரவை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தும்.
2. தர்வினை DESC என்ற சிறப்புச்சொல்லைப் பயன்படுத்தி இறங்கு வரிசையிலும், ASC என்ற சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தி ஏறுவரிசையிலும் வரிசைப்படுத்தலாம். ORDER BY ஐ இவ்வாறு பயன்படுத்தலாம் :
SELECT <column-name>[,<columnname>,...] FROM
<table-name>ORDER BY <columnl>,<column2>,....ASC\DESC;
உதாரணத்திற்கு :
மாணவர்களின் பெயரை அகர வரிசைப்படுத்திய பட்டியலை வெளியிட பயன்படும்
கட்டளையமைப்பு SELECT * FROM Student ORDER BY Name; வரிசைப்படுத்தப்பட்ட மாணவர் அட்டவணை
பின்வருமாறு:
குறிப்பு: ORDER BY clause பயன்படுத்தினால் அட்டவணைக்கு எந்த பாதிப்பையும்
ஏற்படுத்தாது.
WHERE clause
WHERE clause பதிவுகளை வடிகட்டுதலுக்கு பயன்படுகிறது. இது கொடுக்கப்பட்ட
நிபந்தனையை நிறைவு செய்யும் பதிவுகளை மட்டும் பிரித்தெடுக்க உதவுகிறது. உதாரணத்திற்கு,
மாணவர் அட்டவணையில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களின் பட்டியலை, அகர
வரிசைப்படுத்தி ஏறுவரிசையில் வெளியிடும் கட்டளை பின்வருமாறு:
SELECT * FROM Student WHERE Age>=18
ORDER BY Name;
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய
மாணவர்களின் பட்டியலை, அகர வரிசைப்படி இறங்கு வரிசையில், வெளியிடும் கட்டளை பின்வருமாறு :
SELECT * FROM Student WHERE Age>=18
ORDER BY Name DESC;
குறிப்பு:
பற்பல புலங்களின் மீதும் வரிசையாக்கம் செய்யலாம்.
GROUP BY clause
SELECT கூற்றுடன் GROUP BY clause பயன்படுத்தி வரிசைகள் அல்லது நெடுவரிசைகளில்
ஒரே மாதிரியான மதிப்புகளில் கொண்ட மாணவர்களை ஒரு தொகுதியாக பிரிக்கலாம் அல்லது ஒரு
அட்டவணையை குழுக்களாக பிரிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு வகுப்பில் உள்ள ஆண் மாணவர்கள்
அல்லது பெண்மாணவிகளின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ள, GROUP BY ஐ பயன்படுத்தலாம்.
GROUP BY clause ன் தொடரியல்
SELECT <column-names> FROM <tablename> GROUP BY
<column-name>HAVING [condition];
"மேற்கண்ட கட்டளையை மாணவர் அட்டவணையில் பயன்படுத்த :
SELECT Gender FROM Student GROUP BY Gender;
மேற்கூறிய கட்டளையின் வெளியீடு பின்வருமாறு:
இரண்டு முடிவுகள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை கருத்தில்
கொள்ளவும். இதன் காரணம் என்னவெனில், நாம் 'ஆண்' மற்றும் 'பெண்' என்ற இரு பாலினங்களையே
பெற்றுள்ளோம். GROUP BY clause அனைத்து ‘ஆ’ மாணவர்களையும் தொகுத்து, ஒரு வரிசையை மட்டும்
வெளியிட்டுள்ளது. இது போன்றே 'F' மாணவர்களுக்கும் வெளியீடு அமையும்.
உதாரணத்திற்கு, மாணவர் அட்டவணையில் ஆண், பெண் மாணவர்களின் எண்ணிக்கையை
கண்டறிய கீழ்காணும் கட்டளை தரப்பட்டுள்ளது:
SELECT Gender, count(*) FROM Student GROUP BY Gender;
குறிப்பு:
NULL மதிப்புகளையும் சேர்த்துக்கொள்ள COUNT உடன் * என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட SELECT கூற்று ஆண் மற்றும் பெண் மாணாக்கர்களின் எண்ணிக்கையை
வெளியீடும்.
5. பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து
புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு
ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.
விடை. CREATE TAPLE Employee
(
empcode integer NOTNULL,
efirst name. char(20),
elast name char (20),
Designation char (20),
pay integer
PRIMARY KEY. (efirstname, elastname).
);