வினவல் அமைப்பு மொழி - DML கட்டளைகள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

   Posted On :  18.08.2022 12:20 am

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

DML கட்டளைகள்

ஒரு அட்டவணையின் திட்டமைப்பு (அல்லது) வடிவமைப்பு உருவாக்கப்பட்டவுடன், அதில் தரவுகளை சேர்க்கலாம்.

DML கட்டளைகள்

ஒரு அட்டவணையின் திட்டமைப்பு (அல்லது) வடிவமைப்பு உருவாக்கப்பட்டவுடன், அதில் தரவுகளை சேர்க்கலாம். அட்டவணையில் வரிசைகளை சேர்த்தல், நீக்குதல், புதுப்பித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு DML கட்டளைகள் பயன்படுகிறது.

1. INSERT கட்டளை

INSERT கட்டளை தரவுத்தளத்தில் புதிய தரவை சேர்ப்பதற்கும், அல்லது ஒரு அட்டவணையில் புதிய பதிவுகளை சேர்ப்பதற்கு உதவுகிறது. இந்த கட்டளையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

INSERT INTO <table-name> [column-list] VALUES (values);

INSERT INTO Student (Admno, Name, Gender, Age, Place)

VALUES (100, Ashish, 'M', 17, Chennai');

INSERT INTO Student (Admno, Name, Gender, Age, Place)

VALUES (101, Adarsh, M', 18, 'Delhi');

அட்டவணையில் இரு புதிய பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை கீழ்காணலாம்:


மதிப்புக்களின் வரிசைமுறை CREATE TABLE கட்டளையில் உள்ள நெடுவரிசையின் வரிசை முறையுடன் பொருந்தி இருக்க வேண்டும். அனைத்து நெடுவரிசைகளுக்கும் தரவு சேர்க்கப்பட வேண்டுமாயின், நெடுவரிசை பெயர்களைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை. மாணவர் அட்டவணையில் தரவுகளை பின்வரும் கட்டளையின் மூலமும் உள்ளிடலாம்.

INSERT INTO Student VALUES (102, 'Akshith, ‘M, 17, ‘Bangalore');


மேற்கண்ட கட்டளை மாணவர் அட்டவணையில் ஒரு பதிவை சேர்க்கிறது.

ஒரு பதிவினுடைய சில நெடுவரிசைகளுக்கு மட்டும் தரவை சேர்க்க, நெடுவரிசையின் பெயரையும், அதற்கான தரவையும் கீழ்க்கண்டவாறு தரலாம்.

INSERT INTO Student(Admno, Name, Place) VALUES (103, Ayush, Delhi');


மேற்கண்ட கட்டளை பின்வரும் பதிவினை Gender என்ற புலத்திற்கு முன்னியல்பு மதிப்பான M' என்றும், Age என்ற புலத்திற்கு முன்னியல்பு மதிப்பான 18 என்றும் சேர்க்கும்.

INSERT INTO Student (Admno, Name, Place) VALUES (104, Abinandh, Chennai');


மாணவர் அட்டவணை பின்வரும் தரவைக் கொண்டிருக்கும்:


INSERT கட்டளையில் கொடுக்கப்படாத புலங்கள், முன்னியல்பு மதிப்புகள் அதற்கு வரையறுக்கப்பட்டிருந்தால் அவற்றை எடுத்துக் கொள்ளும், இல்லையேல் NULL மதிப்பை இருத்திக் கொள்ளும்.

உங்களுக்குத் தெரியுமா?

INSERT கட்டளையில், விடுப்பட்ட புலங்கள் வரையறுக்கப்பட்ட முன்னியல்பு மதிப்பையோ அல்லது NULL மதிப்பையோ கொண்டிருக்கும்.

2. DELETE கட்டளை

DELETE கட்டளை அட்டவணையிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளை நீக்குகிறது. இது தனிப்பட்ட புலத்தை மட்டும் நீக்காமல், வரிசை முழுவதையும் நீக்குவதால், புலத்திற்கான செயலுருபு தேவையில்லை.

DELETE கட்டளையின் பயன்பாடு பின்வருமாறு :

DELETE FROM table-name WHERE condition;

உதாரணத்திற்கு, 104 என்ற சேர்க்கை எண் கொண்ட பதிவை நீக்குவதற்கான கட்டளை பின்வருமாறு:

DELETE FROM Student WHERE Admno=104;


மேற்கண்ட பதிவு மாணவர் அட்டவணையிலிருந்து நீக்கப்படும்.

அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளையும் நீக்க, பயன்படும் கட்டளை :

DELETE* FROM Student;

இப்பொழுது அட்டவணை வெறுமையாக காணப்படும். DROP கட்டளையை (12.7.4.3 பகுதியில் பார்க்கலாம்) பயன்படுத்தி. இந்த அட்டவணையை முழுவதுமாக அழிக்க முடியும்.

3. UPDATE கட்டளை

ஒரு தரவுத்தளத்தில் உள்ள சில அல்லது அனைத்து தரவு மதிப்புகளையும் UPDATE கட்டளை புதுப்பித்தல் செய்யும் (புதுப்பிக்கும்). அது அட்டவணையில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளையும் புதுப்பிக்க முடியும். UPDATE கட்டளை, WHERE clause ஐ பயன்படுத்தி மாற்றப்பட வேண்டிய வரிசைகளையும், SET சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தி புதிய தரவையும் குறிப்பிடுகிறது. UPDATE கட்டளையை பின்வருமாறு பயன்படுத்தலாம்:

UPDATE <table-name> SET column-name = value, column-name = value,.... WHERE condition;

உதாரணத்திற்கு, பின்வரும் புலங்களை புதுப்பிக்க:

UPDATE Student SET Age = 20 WHERE Place = “Bangalore”;

மேற்கண்ட கட்டளை "Bangalore” என்ற இடத்தில் இருக்கும் மாணவர்களுடைய வயதை 20 என மாற்றி அமைக்கும். புதுப்பிக்கப்பட்ட அட்டவணை பின்வருமாறு:



Tags : Structured Query Language(SQL) வினவல் அமைப்பு மொழி.
12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL) : DML COMMANDS Structured Query Language(SQL) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி : DML கட்டளைகள் - வினவல் அமைப்பு மொழி : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி