வினவல் அமைப்பு மொழி - தரவு வகைகள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

   Posted On :  17.08.2022 10:17 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

தரவு வகைகள்

தரவுத்தளத்தில் தரவுகள், அவற்றில் இருத்தி வைக்கப்படும் மதிப்புகளின் அடிப்படையில் சேமிக்கப்படும்

தரவு வகைகள்

தரவுத்தளத்தில் தரவுகள், அவற்றில் இருத்தி வைக்கப்படும் மதிப்புகளின் அடிப்படையில் சேமிக்கப்படும். இது தரவின் தரவு வகையாக அடையாளப் படுத்தப்படுகிறது (அல்லது) ஒவ்வொரு புலமும் ஒரு தரவு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். கொடுக்கப்பட்ட புலத்தில் உள்ள அனைத்து மதிப்புகளையும் ஒரே வகையாக இருக்க வேண்டும்.

SQL & ANSI தரநிலை உரை மற்றும் எண் தரவு வகைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது. ஆனால் சில தனியார் நிரல்கள் தேதி மற்றும் நேரம் போன்ற தரவு வகைகளை பயன்படுத்துகின்றன. ANSI தரவு வகைகள் கீழே அட்டவணை 12.1-ல் பட்டியலிடப்பட்டுள்ளன.

தரவு வகை /  விளக்கம்

Char (Character) நிலையான அகலம் கொண்ட சர மதிப்பு. இந்த வகையின் மதிப்பு ஒற்றை மேற்கொள் குறிகளுக்குள் தரப்படும். (எ.கா.) Anu's என்பது 'Anu"S' என்று குறிப்பிடப்படும்.


Varchar மாறும் அகலம் கொண்ட குறியுரு சரம். இது char தரவு வகையை போன்று இருந்தாலும் தரவின் அளவிற்கேற்ப பதியும் அளவு மாறும்.


Dec(Decimal) 15.12,0.123 போன்ற பின்ன எண்களை இது குறிக்கும். இங்கு அளவுக்கான செயலுருபு இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. துல்லியம் மற்றும் அளவுகோல். அளவு செயலுருபுவில் வரும் துல்லியம் எத்தனை இலக்க எண் என்பதையும், அளவு கோல் தசமபுள்ளிக்கு வலப்பக்கம் அதிகபட்சமாக எத்தனை இலக்கங்கள் இடம் பெற வேண்டும் என்பதை குறிக்கம். size(5,2) என்பதில் துல்லியம் 5 ஆகவும் மற்றும் அளவுகோல் 2 எனவும் எடுத்துக் கொள்ளும். அளவுக்கோல் துல்லியத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.


numeric இது decimal தரவு வகை போன்றே இருக்கும். ஆனால் இலக்கங்களின் எண்ணிக்கை துல்லிய செயலுருபுவைக் காட்டிலும் அதிகமாக இருத்தல் கூடாது.


Int (Integer) இது தசமபுள்ளி இல்லாத ஒரு முழு எண்ணைக் குறிக்கும். இது size அளபுரு பயன்படுத்தாது.


smallint இது integer வகையை போன்று காணப்பட்டாலும் கொடாநிலை அளவு integer ஐ விட சிறியதாக இருக்கும்.


float இது பதின்ம எண் அமைப்பில் ஒரு மிதவைப் புள்ளி எண்ணை 10ன் அடுக்குகளில் கொண்டிருக்கும். மேலும், அதிகபட்சமாக துல்லியம் 64 இலக்கங்கள் வரை வரையறுக்கப்படலாம்.


real இது float வகையைப் போன்றது. இருப்பினும், size செயலுருபை பயன்படுத்திக் கொள்ளாது. அதிகபட்சம், துல்லியம் 64 இலக்கங்கள் வரையறுக்கப்படலாம்.


double இது real வகையைப் போன்றது. ஆனால் துல்லியம் 64 இலக்கங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்.

Tags : Structured Query Language(SQL) வினவல் அமைப்பு மொழி.
12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL) : Data Types Structured Query Language(SQL) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி : தரவு வகைகள் - வினவல் அமைப்பு மொழி : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி