Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | நினைவில் கொள்க: வினவல் அமைப்பு மொழி

வினவல் அமைப்பு மொழி - நினைவில் கொள்க: வினவல் அமைப்பு மொழி | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

   Posted On :  18.08.2022 12:28 am

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

நினைவில் கொள்க: வினவல் அமைப்பு மொழி

SQL என்பது உறவுநிலைத் தரவுத்தளங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் உதவும் மொழியாகும்.

நினைவில் கொள்க:

• SQL என்பது உறவுநிலைத் தரவுத்தளங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் உதவும் மொழியாகும்.

• MySQL என்பது ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும்.

• SQLன் பல்வேறு கூறுகளானவை தரவு வரையறை மொழி (DDL), தரவு கையாளுதல் மொழி (DML), தரவு வினவல் மொழி (DQL), பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மொழி (TCL), தரவு கட்டுப்பாட்டு மொழி (DCL).

• DDL அட்டவணைகளை உருவாக்குதல் மற்றும் அழித்தலுக்கான கூற்றுகளை வழங்குகிறது.

• DML ஒரு அட்டவணையில் தரவை சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் நீக்குதலுக்கான கூற்றுகளை வழங்குகிறது.

• DCL தரவு அணுகுதலுக்கான அங்கீகார கட்டளைகளை வழங்குகிறது.

• தரவுத்தளத்திலுள்ள பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்ய TCL கட்டளைகள் பயன்படுகின்றன.

• DQL கட்டளைகள் தரவுத்தளத்தில் வினவல்கள் உருவாக்க உதவுகின்றன.

• CREATE TABLE கட்டளை ஒரு புதிய அட்டவணையை உருவாக்குகிறது.

• SELECT கட்டளை வினவல்களை உருவாக்க உதவுகிறது. மேலும், அதனை • WHERE clause பயன்படுத்தி பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்த முடியும்..

• INSERT கட்டளை அட்டவணையில் வரிசைகளை சேர்க்க அனுமதிக்கிறது.

• DELETE கட்டளை அட்டவணையில் வரிசைகளை நீக்க அனுமதிக்கிறது. •

• UPDATE கட்டளை ஏற்கனவே உள்ள வரிசைகளின் மதிப்புகளுக்கு மாற்றங்கள் செய்ய அனுமதிக்கின்றது.

• ALERT TABLE கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

• TRUNCATE கட்டளை அனைத்து பதிவுகள் மற்றும் அட்டவணையை நீக்கி, ஒதுக்கீடு செய்த இடத்தை விடுவிக்கப் பயன்படுகிறது.

• DROP TABLE கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்குகிறது.

• COMMIT கட்டளை எந்தவொரு பரிவர்த்தனையையும் தரவுத்தளத்தில் நிரந்தரமாக சேமித்து வைக்கிறது.

• SAVEPOINT கட்டளை தேவையானப் போது, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரிவர்த்தனையை தற்காலிகமாக சேமிக்கிறது.

• ROLLBACK தரவுத்தளத்தை அதன் கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்ப பெறும்.

Tags : Structured Query Language(SQL) வினவல் அமைப்பு மொழி.
12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL) : Points to remember: Structured Query Language(SQL) Structured Query Language(SQL) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி : நினைவில் கொள்க: வினவல் அமைப்பு மொழி - வினவல் அமைப்பு மொழி : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி