Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள் விடைகள்

அலைகள் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 11 : Waves

11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்

கருத்துரு வினாக்கள் விடைகள்

இயற்பியல் : அலைகள் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எண்ணியல் கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : கருத்துரு வினாக்கள் விடைகள்

அலைகள் (இயற்பியல்)

கருத்துரு வினாக்கள்


1. வாயுவில் குறுக்கலைகள் ஏற்படாது ஏன்?  திண்மத்திலும், நீர்மத்திலும் குறுக்கலைகள் ஏற்படுமா? 

விடை:

குறுக்கலைகளானது அகடு மற்றும் முகடுகளாக பரவக்கூடியவை. எனவே, வடிவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையுடன் அவ்வலைகள் பரவுகின்றன. 

i) வாயுவானது, நெகிழ்வுத்தன்மையற்ற வடிவமைப்பு பெற்றுள்ளன. எனவே வாயுவில் குறுக்கலைகள் ஏற்படாது. 

ii) நீர்மத்திலும், திண்மத்திலும் குறுக்கலைகள் ஏற்படும். ஏனெனில் திண்மம் மற்றும் நீர்மமானது நெகிழ்வு தன்மையுடைய வடிவமைப்பு பெற்றுள்ளன. எனவே குறுக்கலைகள் எளிதில் உருவாகும்.


2. நமது தேசிய விலங்கின் முழக்கம் அல்லது உறுமல் (roar) கொசு ஏற்படுத்தும் ஒலியிலிருந்து வேறுபடுகிறது ஏன்? 

விடை:

i) நமது தேசிய (புலி) ஒலியானது (உறுமும்), குறைந்த சுருதி மற்றும் அதிக செறிவு (அல்லது) உரப்பு பெற்றுக் காணப்படும். 

ii) கொசு ஏற்படுத்தும் ஒலியானது, அதிக சுருதி மற்றும் குறைந்த செறிவு (அல்லது) உரப்பு பெற்று காணப்படும்.


3. மூலமும் கேட்பவரும் ஓய்வில் இருக்கும் போது, ஒரு வலிமையான காற்று வீசுகிறது. அதில் டாப்ளர் விளைவு உள்ளதா?

விடை:

மூலமும், கேட்பவரும் ஓய்வில் இருந்தாலும் வீசும் வலிமையான காற்றானது இயக்கத்தில் உள்ளதால் ஒரு ஒலி மூலமாக செயல்படுகிறது. எனவே டாப்ளர் விளைவு ஏற்படுகிறது.


4. காலியான அறையில் ஒரு ஒலி உரப்பாகவும் (louder) அதே ஒலி தட்டு முட்டுப் பொருள்கள், இருக்கைகள் உள்ள அறையில் உரப்பு குறைவாகவும் இருக்க காரணம் என்ன? 

விடை:

ஒலி என்பது ஒரு வகை ஆற்றல் ஆகும். 

i) தட்டு, முட்டுப் பொருள்கள், இருக்கைகள் உள்ள அறையில் ஏற்படும் ஒலி (ஆற்றலானது) அப்பொருள்களால் உட்கவரப்படுகின்றன. எனவே ஒலி உரப்பு குறைவாக உள்ளது. 

ii) காலியான அறைகளில் ஏற்படும் ஒலி (ஆற்றலானது) எந்தப் பொருட்களாலும் உட்கவரப்படுவது இல்லை. எனவே ஒலி உரப்பு அதிகமானதாகத் தோன்றும்.


5. சூறாவளி, கொந்தளிப்பு, புயல் ஆகியவை வரவிருப்பதை விலங்குகள் எவ்வாறு முன் கூட்டியே உணர்கின்றன? 

விடை:

• ஒரு சில விலங்குகள் (நாய், பறவை போன்றன) குறைந்த அதிர்வெண் உடைய ஒலி அலைகளை உணரும் திறன் பெற்றவை. 

• இவை நிலம், நீர், காற்று ஆகியவற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகளை அறிந்து சூறாவளி, கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே உணர்ந்து ஒலி எழுப்புகின்றன.


5. நீர் வரும் திறந்த குழாயின் அடியில் வைக்கப்பட்ட பாத்திரம் ஒன்று நிரம்ப இருப்பதை எவ்வாறு சற்று முன்னரே அறிய முடியுமா? காரணம் தருக. 

விடை:

i) காற்றில் உருவாகும் ஒலியின் அதிர்வெண் அதன் நீளத்திற்கு எதிர்தகவில் அமையும்.

f α 1/L (காற்றில்) 

ii) பாத்திரத்தில் நீரானது நிரம்ப, நிரம்ப காற்றில் அதனுடைய நீளமானது (l) குறையும். எனவே அதனோடு தொடர்புடைய ஒலியின் அதிர்வெண்ணும் (f) குறையும். இதனால் ஒலி குறைந்து ஒலிக்கும். 

iii) இந்த ஒலியின் சுருக்கத்தன்மையின் காரணமாக, பாத்திரத்தில் நீர் நிரம்ப இருப்பதை முன்னரே அறியலாம்.

Tags : Waves | Physics அலைகள் | இயற்பியல்.
11th Physics : UNIT 11 : Waves : Conceptual Questions Answers Waves | Physics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள் : கருத்துரு வினாக்கள் விடைகள் - அலைகள் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்