வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள்
நல்லியல்பு வாயு ஒன்றைக் கருதுக. அதன் சமன்பாடு
இங்கு P-அழுத்தம், V-பருமன், T-வெப்பநிலை, μ-மோல்களின் எண்ணிக்கை, R - பொது வாயு மாறிலி, கொடுக்கப்பட்ட நிறை கொண்ட மூலக்கூறுக்கு சமன்பாடு (11.26)யை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
நிறை m யை, மாறிலியாக வைத்தால், வாயுவின் அடர்த்தியானது, பருமனுக்கு எதிர்தகவில் மாறும்
சமன்பாடு (11.28) யை (11.27)ல் பொருந்தினால், கிடைப்பது
இங்கு c ஒரு மாறிலி.
சமன்பாடு (11.25) இல் கொடுக்கப்பட்ட காற்றில் ஒலியின் திசைவேகத்தை கீழ்க்காணுமாறு எழுதலாம்
மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நாம் அறிவது,
(a) அழுத்தத்தின் விளைவு :
ஒரு நிலையான வெப்பநிலையில், அழுத்தம் மாறுபடும்போது, அடர்த்தியும் நேர்விகிதத்தில் மாறுகிறது; அதாவது (P/ρ) நிலையாக அமைகிறது. இதன் பொருள் நிலையான வெப்பநிலையில், ஒலியின் திசைவேகம் அழுத்தத்தை சாராதது. ஒரு மலையின் மேலும், கீழும் வெப்பநிலை சமமாக இருந்தால், ஒலியின் திசைவேகம் மாறாமல் இருக்கும். ஆனால் நடைமுறையில் மலையின் மேலும் கீழும் வெப்பநிலை சமமாக இருக்காது. எனவே, ஒலியின் திசைவேகமும் மாறுபட்டிருக்கும்.
(b) வெப்பநிலையின் விளைவு :
ஒலியின் திசைவேகம், வெப்பநிலையின் (கெல்வின் மதிப்பு) இருமடி மூலத்திற்கு நேர்தகவில் மாறுகிறது.
v0 என்பது 0°C அல்லது 273K இல் ஒலியின் திசைவேகம் v என்பது ஏதேனும் ஒரு வெப்பநிலை T இல் ஒலியின் திசைவேகம் எனவும் கொண்டால்,
0°Cல் ஒலியின் திசைவேகம் v0 = 331m s-1 என்பதால், ஏதேனும் ஒரு வெப்பநிலை t°C யில்
v = (331 + 0.60t) m s-1
ஒவ்வொரு 1°C வெப்பநிலை உயர்வுக்கும் ஒலியின் திசைவேகம் 0.61 ms-1 அதிகரிக்கிறது.
குறிப்பு: வெப்பநிலை அதிகரிக்கும் போது மூலக்கூறுகள் அக ஆற்றல் அதிகரிப்பால் வேகமாக அதிர்வுறும். எனவே திசைவேகம் அதிகரிக்கிறது.
(c) அடர்த்தியின் விளைவு:
சம வெப்பநிலை, அழுத்தத்தில் உள்ள இரு வாயுக்களை கருதுக . அவற்றின் அடர்த்தி மட்டும் வெவ்வேறு என்க. அந்த இரு வாயுக்களின் வழியே ஒலியின் திசைவேகங்கள் முறையே,
மதிப்பு சமமான வாயுக்களுக்கு,
எனவே, வாயு ஒன்றின் வழியே ஒலியின் திசைவேகம் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமைகிறது.
(d) ஈரப்பதத்தின் விளைவு (humidity):
ஈரப்பதம் உள்ள காற்றின் அடர்த்தி உலர்ந்த காற்றின் அடர்த்தியைப் போல் 0.625 மடங்கு ஆகும். அதாவது ஈரப்பதம், காற்றின் அடர்த்தியை குறைத்து விடுகிறது. எனவே, ஈரப்பதம் உள்ள காற்றில் ஒலியின் திசைவேகம் அதிகரிக்கிறது.
ρ1, v1 மற்றும் ρ2, v2 என்பவை முறையே உலர்ந்த காற்று, ஈரப்பரம் உள்ள காற்றின் அடர்த்தி மற்றும் ஒலியின் திசைவேகம் என்க.
P என்பது வளிமண்டல அழுத்தமாதலால் டால்டனின் பகுதிஅழுத்தவிதியின் படி (Dalton’s law of partial pressure) கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
இங்கு p1 , p2, முறையே உலர்ந்த காற்று மற்றும் நீராவியின் பகுதி அழுத்தங்கள்.
(e) காற்றின் விளைவு:
காற்று வீசுவதாலும் ஒலியின் திசைவேகம் மாறும். காற்றின் திசையில் ஒலி செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கிறது. காற்றிற்கு எதிர்த்திசையில் ஒலியின் திசைவேகம் குறைகிறது.
எடுத்துக்காட்டு 11.9
ஆக்சிஜன், நைட்ரஜனின் அடர்த்திகளின் தகவு 16:14. எந்த வெப்பநிலையில் ஆக்சிஜனில் செல்லும் ஒலியின் திசைவேகமானது, 17°C இல்நைட்ரஜனில் செல்லும் ஒலியின் திசைவேகத்திற்கு சமமாகும்?
தீர்வு:
சமன்பாடு (11.25) லிருந்து,
இங்கு, R - பொது வாயு மாறிலி, M - வாயுவின் மூலக்கூறு நிறை
17°C யில் நைட்ரஜனில் ஒலியின் வேகம்
இதேபோல் t°C யில் ஆக்சிஜனில் ஒலியின் வேகம்
இரு வாயுக்களுக்கும் ஒரே மதிப்பு. ஆதலால், மேலே (1) மற்றும் (2) யை சமப்படுத்த
இருபுறமும் இருமடியாக்கி (squaring) γ R யை நீக்கி, சரிசெய்ய,
ஆக்சிஜன், நைட்ரஜனின் அடர்த்திகளின் தகவு 16:14, எனவே ,
சமன்பாடு (5) ஐ (3)ல் பொருத்த