லாப்லஸ் திருத்தம் (Laplace Correction)
1816 ல் லாப்லஸ், மேலே குறிப்பிட்ட குறைபாட்டை, ‘’ஒலி ஓர் ஊடகத்தில் பரவும் போது துகள்கள் மிக விரைவாக அலைவுறுவதால் இறுக்கங்களும், தளர்ச்சிகளும் மிக வேகமாக ஏற்படும்" எனக் கருத்தில் கொண்டு சரி செய்தார். இறுக்கத்தினால் ஊடகத்திற்கு கொடுக்கப்படும் அதிக வெப்பமும், தளர்ச்சி மூலம் ஏற்படும் குளிர்ச்சி விளைவும் சுற்றுப் புறத்துடன் சமன் செய்யப்படாது. ஏன் எனில் காற்று (ஊடகம்) ஓர் அரிதிற்கடத்தியாகும். வெப்பநிலை மாறாது எனக் கருத முடியாததால், இது ஒரு வெப்ப பரிமாற்றமில்லா நிகழ்வு ஆகும். வெப்ப பரிமாற்றமில்லா விளைவு எனக் கருதுவதால், வாயு பாய்சன் விதியை பின்பற்றுகிறது (நியூட்டன் கருதியதுபோல் பாயில் விதி அல்ல). எனவே,
இங்கு
CP - அழுத்தம் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
Cv - பருமன் மாறா மோலார் தன் வெப்ப ஏற்புத்திறன்
சமன்பாடு (11.23)யை வகைப்படுத்த,
இங்கு, KA காற்றின் வெப்பமாற்றீடற்ற விளைவில் பருமக் குணகம்.
சமன்பாடு (11.23) ஐ (11.16) இல் பொருத்த காற்றில் ஒலியின் திசைவேகம்
காற்றில் முக்கியமாக நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் பிற (இரட்டை அணு மூலக்கூறு வாயு) இருப்பதால், γ = 1.4 எனவே, காற்றில் ஒலியின் திசைவேகம் vA = ( √1.4)(280 m s-1) = 331.30 m s-1. இது ஆய்வு முடிவு மதிப்பிற்கு மிக இறுக்கமாக உள்ளது.