இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
முடிவுரை
தொழில்மயமாக்கல்
என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். திட்ட காலத்தில் இந்தியாவின்
தொழிற்துறை விரிவாக்கமானது கலப்புப் பொருளாதாரம் ஏற்பட வழிவகை செய்தது. சுதந்திரத்திற்கு
முன் இருந்த தொழிற்துறை வளர்ச்சியைக் காட்டிலும் ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் தொழில்
வளர்ச்சி தனித்துவம் பெற்று விளங்கியது.
பாடச்சுருக்கம்
•இந்தியத்
தொழிலக வரலாறு மனித குல வரலாறு உருவானதிலிருந்தே தொடங்குகிறது.
•இந்தியக்
கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றினைக் கொண்டுள்ளது.
•புகழ்பெற்ற
இந்தியக் கைவினைப் பொருட்கள் காலனித்துவ ஆட்சியில் சீர்குலைந்தன.
•19ஆம்
நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து தொழில்மயமாக்கலின் செயல்பாடு இந்தியாவில் தொடங்கியது.
•இந்தியாவின்
நவீன தொழிற்துறை அமைப்பு பருத்தி நெசவு தொழிற்சாலை நிறுவியதிலிருந்து தொடங்குகிறது.
•இந்தியத்
தொழிற்துறையின் கூட்டமைப்பு என்பது ஒரு அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறையை வழிநடத்தும்,
தொழிற்துறையை நிர்வகிக்கும் ஓர் அமைப்பு ஆகும்.
மேற்கோள்
நூல்கள்
1.
Dharmakumar (ed). The Cambridge Economic History of India, Vol II, C. 1757-2003
2.
The Gazeteer of India. Vol II Publications Division
3.
India 1995 - A reference Annual, Publications Division
இணையதள வளங்கள்
1.
http://www.suezcanal.gov.eg
2. http://www.cii.in