Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India

   Posted On :  17.08.2023 05:24 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்

இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது. தொழில்நுட்ப திறன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன.

இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்

 

அ. தொழிற்துறை வளர்ச்சி (1950-1965)

இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது. தொழில்நுட்ப திறன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை ஏனெனில் அவைகளின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குவதே ஆகும். இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தின. இதன் விளைவாக இக்காலக் கட்டத்தில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒரு துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

 

ஆ. தொழிற்துறை வளர்ச்சி (1965-1980)

முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்கள் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதால், நுகர்வோர் பொருட்களின் துறை புறக்கணிக்கப்பட்டது. நுகர்வோர் பொருட்களின் துறையே கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இதன் விளைவாக தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தது. எனவே இந்த காலகட்டம் பின்னடைவு காலமாக கருதப்படுகிறது.

 

இ. தொழிற்துறை வளர்ச்சி (1980–1991)

1980 களின் காலகட்டத்தை தொழிற் துறையின் மீட்பு காலமாகக் கருதலாம். ஏனெனில் இந்தக் காலத்தில் தொழிற்துறை மிகவும் வளமான வளர்ச்சியைக் கண்டது.

 

ஈ. 1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சி

1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற்துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன. தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக் கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது. புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.


Tags : Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India : Phases of Industrial development in India Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி : இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி