இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நவீன தொழிலகங்களின் வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
நவீன தொழிலகங்களின்
வளர்ச்சி
1861ஆம்
ஆண்டு 2,573 கிலோ மீட்டர் ஆக இருந்த ரயில்வேயின் நீளம் 1914ஆம் ஆண்டு 55,773 கிலோ மீட்டர்களாக
அதிகரித்தது. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தைச் சுமார்
4,830 கிலோ மீட்டர் தூரமாகக் குறைத்தது. இந்த குறைக்கப்பட்ட தூரம் இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு
மேலும் உதவியது. சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும்
சணல் ஆலைகள் 36 லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அதிகாரத்தைப்
பலப்படுத்தி அதன் மூலம் ஏராளமான வெளிநாட்டு தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும்
குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து ஈர்த்தனர். அதிக லாபம் ஈட்டும் இந்திய தொழிற்துறைகள்
வெளிநாட்டு முதலாளிகளை மிகவும் கவர்ந்திழுத்தது. ஏனென்றால் வேலையாட்களும் மூலப்பொருட்களும்
மிகவும் மலிவாக கிடைத்தன. மேலும் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் ஒரு சந்தையை வழங்க
தயாராக இருந்தன.