இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் தொழிலக வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India
இந்தியாவில்
தொழிலக வளர்ச்சி
தொழிலக
வளர்ச்சியின் கனவை நனவாக்கும் விதமாக இந்திய அரசு சில தொழிற்துறை கொள்கைகளையும், ஐந்தாண்டு
திட்டங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு தொழிற்துறையில் ஏற்பட்ட
மிக முக்கியமான புதுமைகளுள் ஒன்று ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
மேலும் 1948ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழிற்துறையில்
நேரடியாக பங்களிப்பினை வெளிப்படுத்துகிறது. இந்த தீர்மானம் தொழிற்துறை வளர்ச்சியில்
ஒரு தொழில் முனைவோராகவும் அதிகார மையமாகவும் அரசின் பங்கினைவரையறுத்தது. 1956 ஆம் ஆண்டு
தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அட்டவணை 1
இவ்வகையான
தொழிற்துறைகளை அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும். அவற்றுள் சில அணுசக்தி, மின்னணு, இரும்பு
மற்றும் எஃகு ஆகியவை அடங்கும்.
அட்டவணை 2
இவைகள்
சாலைகள் மற்றும் கடல் போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகிழி மற்றும்
உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள்
ஆகியவை அடங்கும்.
அட்டவணை 3
இந்த
வகையின் கீழ் மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியவை அடங்கும்.
தொழிலக வகைப்பாடு
•மூலப்பொருட்களின் அடிப்படையில்
தொழில்களை வேளாண் அடிப்படையிலானவை மற்றும் கனிம அடிப்படையிலானவை என வகைப்படுத்தலாம்.
•தொழிலகங்கள் அவைகளின் பங்களிப்பின்படி
அடிப்படை தொழில்கள் மற்றும் முக்கிய தொழில்கள் எனவும் வகைப்படுத்தலாம்.
•தொழில் உரிமத்தின் அடிப்படையில்
பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத் துறை என தொழிலகங்களை வகைப்படுத்தலாம்.